நாகமாலை இசைத்தட்டில் அமைந்துள்ள பாடல்கள் ஒளி வடிவமாக உங்கள் இல்லங்கள்தோறும் வலம்வருகின்றது.

 

 

 

 வரலாற்றுச்சிறப்புமிக்க நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் குடிகொண்டமைந்துள்ள நாகர்கோவில் ஆலயங்களின் புகழினை பாமாலையாக்கி அதற்கு அழகானதும், ஆளமானதும், எமது கிராமத்தின் நாமமாகவும், புனைந்து நாகமாலை என்னும் ஆழமான கருத்தினக்கொண்ட இசைத்தட்டினை கடந்த வருடம் 2013ம் ஆண்டு பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் நாள் தீர்த்தத்திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக வெளியிடப்பட்டது. அவ் இசைத்தட்டின் ஒளிப்பதிவேடு திருமதி செல்லத்தம்பி பூமாதேவி அவர்களினால் அவுஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது அப்பாடல்களில் முழுமுதற்கடவுளாகிய கெளத்தந்துறை பிள்ளையார் புதுமைகளை கொண்ட பாடலை ஒளிவடிவமாக பார்வையிடலம் ஏனைய பாடல்கள் வரிசைக்கிரமாக உங்கள் இல்லங்களை முத்தமிடும் என்பதனை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றார்கள் நாகமாலை இசைத்தட்டு குழுவினர்.