அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் கடந்த 06.07.2017 அன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி நண்பகல் 1 மணியளவில் நிறவுற்று. பின்னர் இரவு நிகழ்ச்சிகள் நிர்வாகத்தினரால் குறித்த நேரத்தில் ஆரம்பமாகியது. இரவு நிகழ்ச்சிகளில் நாதஸ்வரக்கச்சேரி, வில்லிசை, இஅசைக்கச்சேரி அதனைத்தொடர்ந்து 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று எம்பெருமான் உள்வீதி வெளிவீதியுலா வலம்வந்து அடியார்பெருமக்களுக்கு அருள்பாலித்து அருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

குறிப்பு:- எமது கிராம இளைஞர்களால் இரவு நிகழ்ச்சிகளுக்கு பூரண ஒத்துளைப்பும் வழங்கி அதிகாலை அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் எம்பெருமானை அமர்த்தி வெளிவீதியுலா தூக்கிச்செல்வதற்கும் ஆதரவு வழங்கி எம்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுள்ளனர். இதனால் ஆலய சமூகம் அவர்களின் ஒத்துளைப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளதுவே எம்பெருமானின் அருள் அவர்களுக்கு உடனேயே கிடைத்துள்ளதாகும்.

Last Updated (Tuesday, 11 July 2017 03:50)