Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் அருள்மிகு முருகையா தேவஸ்தான கந்தசஷ்டி விரத விழா.
We have 50 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday104
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week661
mod_vvisit_counterThis month2970
mod_vvisit_counterAll762263
Live User

அருள்மிகு முருகையா தேவஸ்தான கந்தசஷ்டி விரத விழா.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விரத விழா கடந்த 24.10.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 31.10.2014  வெள்ளிக்கிழமை வைரவர் மடையுடன் நிறைவுபெற்றது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

கந்தசஷ்டி விரத ஆரம்பதினத்தன்று ஆலய நிர்வாகசபையினரால் திருப்பணி உண்டியல் ஆலயமுன்றலில் வைக்கப்பட்டது.

அன்றையதினம் கடந்தகால ஆலய நிர்வாகசபை தலைவர் அமரர் சி.மயில்வாகனம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியாரால் நிர்வாகசபை பொருளாளரிடம் ரூபா இரண்டு லட்சம் திருப்பணி நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கந்தசஷ்டி விரத ஆறு நாட்களும் அடியவர்களினால் மிகவும் பக்தியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த வருடம். அபிடேகம், விசேடபூஜைகளை சுப்பிரமணிய சர்மா (ஆலய குருக்களின் மகன்)  பயபக்தியுடன் மிகுந்த நேர்த்தியான முறையில் செய்து நிறைவேற்றினார்.

ஆலயத்தில் சூரபன்மன் வதைப்படலம் புராணபடனம் ஓதுவார்களினால் மிகச்சிறப்பாக நடார்த்தப்பட்டது. குறிப்பாக புராணபடன விரிவுரையினை கொழும்பில் இருந்து வருகை தந்த ஆறுமுகம் நவரத்தினசாமி மற்றும் கனடாவில் இருந்து வருகை தந்த அடியவர் நாகதம்பி நேசரத்தினம் ஆகியோர் மிகவும் சிறப்பான முறையில் ஆற்றியிருந்தனர்.

 

ஆலய பூஜைகளை நடாத்திய சுப்பிரமணிய சர்மா மற்றும் புராணபடன விரிவுரையாளர்களான ஆ.நவரத்தினசாமி, நா.நேசரத்தினம ஆகிய மூவர்களும் ஆற்றிய பணிகளை பாராட்டி ஆலய நிர்வாகசபையினரால் கெளரவிக்கப்பட்டனர். 

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery