வணக்கம் உங்களை வரவேற்கிறது நாகர்மணல்.கொம்
 

 

 

  Users online

                    தெற்காசியாவின் முத்து என வர்ணிக்கப்படுகின்ற ஈழத்திருநாட்டின் வடமுனை என கருதப்படுவது யாழ்ப்பாணக்குடாநாடு ஆகும். யாழ்குடாநாடு வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் சகலவளங்களும் நிறைந்து விளங்குவது வடமராட்சி பிரிவு என்றால் மிகையாகாது. வடமராட்சி பிரிவின் தலைநகரம் என்று கூறப்படும் பருத்தித்துறைக்கு கிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது நாகர் கோவில் கிராமம் ஆகும்.இது கிழக்கு, மேற்கு, தெற்கு என மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. சுமார் 10000 சனத்தொகையையும்கொண்டது.கூடுதலானோர்சிவனோபாயமாக கடற்றொழிலையேமையமாககொண்டுள்ளனர்.இருபடசாலைகள் அமைந்துள்ளது.ஒன்று நாகர்கோவில் மகாவித்தியாலயம், மற்றயது கனிஸ்டதர பாடசாலை.இரண்டு பாடசாலைகளிலும் சுமார் 2000 மாணவர்கள் வரையில் கல்வி கற்கின்றனர்.நாகர்கோவில் கிராமத்தில் சரித்திர புகழ்பெற்ற பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ளது.இதன் அடிப்படையில்தான் இக்கிராமத்திற்கு நாகர்கோவில் என்னும் பெயர் வழங்கி வரலாறாயிற்று.

                                      ஒருகாலத்தில் இவ்வூரில் நாகர் என்னும் சாதியர் வசித்து வந்ததாகவும் மேல் நாட்டவர் இவ்வூரில் அமைந்துள்ள கெளத்தந்துறைமௌகம் ஊடாக கப்பலில் வியாபார நோக்கமாக வந்து இவ்வூர் மக்களை பிடித்து பலவந்தமாகக் கப்பலில் ஏற்றிச்செல்கின்றபோது

                                                                                                           அக்கப்பலில் பாய்மரத்தில் ஒருபாம்பு இருக்கக் கண்டதுடன் கடலில்கொந்தளிப்பும் புயற்காற்றும் உண்டாகியதாகவும் அப்பொழுது கப்பலில் இருந்தஒருபெண் உன்மந்தனாகி (பக்திகலைகொண்டு) எனது பதிகளை இறக்கிவிட்டால் கப்பல்நகரும் என வாக்குக்கூறியதாகவும் மக்களை இறக்கிய பின் புயற்காற்றும் கடற்கொந்தளிப்பும் அடங்கி பாய்மரத்தில் இருந்த நாகபாம்பு மாயமாக அகன்றுகாணாமற்போனதாகவும் அதன் பின்புதான் இப்பதிக்கு நாகர்கோவில் என்னும் பெயர் வழங்கிய வரலாறாயிற்று எனவும் கர்ணபரம்பரைக் கதைகள் பரவுகுகின்றன பின் ஊர்மக்களால்

                          ஐந்து தலைநாகலிங்கத்தை கருவறையில் ஸ்தாபித்து நாகதம்பிரானை வழிபடலாயினர்.என அறியக்கிடைக்கின்றது.               

             இவ் ஆலையத்தைத்தவிர கெளத்தந்துறைவிநயகர், முருகையாதேவஸ்தானம், கண்ணகிஅம்மன்கோவில் அமைந்துள்ளது இவ்வூர் மக்களில் 99 வீதமானோரும் இந்துக்களே. மற்றையோர் கிறீஸ்தவர். கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளோரில் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக உள்ளனர். விவசாயிகள் பயிர் செய்வதற்கு மழையை நம்பியிருப்பதால் வருமானம் குறைந்தவர்களாகவுள்ளனர். பலர் படித்து அரச பதவிகளிலும் ஆசிரிய ஆசிரியர்களாகவும் விளங்குகின்றனர்.

                          நாகதம்பிரான் ஆலயத்தின் அற்புதம் பற்சில வசனங்களில் கூறலாம். இக்கிராமத்தில் யாரையாவது எச்சமயத்திலாயினும் அரவம் (பாம்பு) தீண்டினால் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதில்லை.மேற்படி ஆலயத்திற்குகொண்டுபோய் பூசகரிடம்கோயில் மருந்துவாங்கி உட்கொண்டும் கடித்தஇடத்திற்குப் பூசியும் விடத்தை(விஷத்தை) நீக்குவது வழக்கம். நாம் அறிந்தவரையில் இக்கிராமத்தில் பாம்புதீண்டிய நபரை உயிருடன் ஆலயத்தில் சேர்த்துவிட்டால் யாராவது இறந்ததாக தெரியவில்லை. இதுவே இக்கிராமத்துக்கு பெருமைசேர்க்கும் மற்றொரு விடயமாக அமைந்துள்ளது.

           இக்கிராமத்தில் மீன்சந்தை, மரக்கறிசந்தை, வர்த்தகஸ்தாபனங்கள் என்பன அமந்துள்ளது. வடமராட்சி கிழக்கு பல நோக்குகூட்டுறவுச்சங்கம் கிளைகளை நிறுவி மக்களுக்கு பொருட்களை நியாய விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளைச் செய்துள்ளனர். போக்கு வரத்துசெய்வதற்கு தினமும் ஆறுதடவைகள் பருத்தித்துறையிலிருந்து பேரூந்து வசதி உள்ளது. வைத்தியசாலை அயற்கிராமமாகிய அம்பன் கிராமத்தில் உள்ளது பெரிய வைத்தியசாலை பருத்தித்துறையில் உள்ளது பேரூந்துவசதி இருப்பதால் மக்கள் இலகுவில் சிகிச்சைபெற உதவியாக உள்ளது. மற்றும் அரசதேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு வடமராட்சி கிழக்கு பிரிவு பிரதேச செயலகம் மருதங்கேணியில் அமைந்துள்ளது. வடமராட்சி பிரிவு நீண்ட பிரதேசமாக உள்ளதால் மக்களின் வசதிக்காக ஓர் உப அலுவலகத்தை அம்பன் கிராமத்தில் அமைத்து வாரத்தில் இருநாட்களில் மக்களின் தேவைகளை பூர்த்திசெய்கின்றனர்.

            இக்கிராமத்தில் உள்ள மக்களால் என்றைக்கும் மறக்க முடியாததும் துன்பகரமானதுமாக விளங்கும்சம்பவம்.22.09.1995.வெள்ளிக்கிழமையன்று வேல்முருகனை தரிசித்தவேளையில் நாகர் கோவில் மகாவித்தியாலயத்தின்மீது இலங்கை விமானப்படைக்கு சொந்தமான

"புக்காரா" ரக குண்டுவீச்சு விமானம் குண்டுகளைவீசி இருபது மாணவர்களை பலியாக்கியதுடன் பல மாணவர்களை அங்கவீனர்களாக்கியதுடன்.இச்சம்பவத்தை இக்கிராம மக்கள் ஒவ்வொருவருடமும்  மிகுந்த துன்பத்துடன் நினைவுகூருவர்.

 

         தற்போது இக்கிராமம் ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்து வேறு வேறு இடங்களில் உள்ள அகதிமுகாம்களில் சொல்லொணாத்துயரங்களை அனுபவித்து வழ்கின்றார்கள்.இக்கிராமத்தில் உள்ள வீடுகள், சந்தைக்கட்டிடங்கள், வர்த்தகநிலய்ங்கள், ஆலயங்கள் யாவும் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அறியக்கூடுயதாகவுள்ளது.

   எனவே இக்கிராமம் தற்போது அடையாளம் காணமுடியாதவாறு அழிந்துள்ளது என்றே சொல்லப்படும்.

நன்றி.

 

குறிப்பு:: எங்கள் கிராமத்தின் வரலாற்றுச் சுருக்கத்தை  எழுத்துருவாக்கித்தந்த       திரு. ஆறுமுகம் நவரத்தினசாமி அவர்களுக்கு இவ் இணையம் நன்றிகளைத்தெரிவிக்கிறது.

 

 
   Back<<<                                                                         www.nakarmanal.com