|
துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
|
பொருள்::
|
ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும்
நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.
|
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
|
பொருள்::
|
புகழையும்இ நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை
விட்டொழிக்க வேண்டும். |
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை
ஆஅது மென்னு மவர்.
|
பொருள்::
|
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள்இ தம்முடைய செயல்களால் தமது
புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.
|
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
|
பொருள்:: |
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட
இழிவான செயலில் ஈ.டுபட மாட்டார்கள்.
|
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
|
பொருள்:: |
என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச்
செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும்
தொடராதிருப்பதே நன்று. |
ஈ.ன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
|
பொருள்:: |
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில்
ஈ.டுபடக்கூடாது.
|
| |
பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை. |
|
பொருள்::
|
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிடஇ கொடிய வறுமை
தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும். |
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
|
பொருள்:: |
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை
அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். |
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
|
பொருள்:: |
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால்
அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும். |
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
|
பொருள்:: |
'தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பதுஇ பச்சை மண்ணால்
செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றிஇ அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான். |
|