கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

 வினை செயல்வகை.


 Users online ::

         

                       சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

பொருள்::

ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.


                            தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.

பொருள்::

நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.


                         ஒல்லும்வாயெல்லாம் வினைநன்றேஒல்லாக்கால்செல்லும்வாய்நோக்கிச் செயல்.

 

பொருள்::

 இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.


                        வினைபகை யென்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.

 

பொருள்::

 எற்ற செயலையோஇ எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.


                         பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.

 

பொருள்::

ஒரு காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்புஇ அதற்குத் தேவையான பொருள்இ ஏற்ற கருவிஇ காலம்இ மேற்கொள்ளப் போகும் செயல்முறைஇ உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


                       முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல்.

 

பொருள்::

ஈ.டுபடக்கூடிய ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன்இ அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள்இ அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

              
   செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளங் கொளல்.

 

பொருள்::

ஒரு செயலில் ஈ.டுபடுகிறவன்இ அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.


                        வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.

 

பொருள்::

ஒரு செயலில் ஈ.டுபடும்போதுஇ அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.


                            நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

 

பொருள்::

நன்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.


                          உறைசிறியார்உண்ணடுங்கல் அஞ்சிக்குறைபெறிற்  கொள்வர்பெரியார்ப் பணிந்து

 

பொருள்::

'தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

                                                                                         

                                       

  www.nakarmanal.com