|
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங் கொறுப்பது வேந்து.
|
பொருள்::
|
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்துஇ மீண்டும் அவை நிகழா வண்ணம்
அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.
|
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
|
பொருள்::
|
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித்இ தண்டிக்கும் போது
மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும். |
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
|
பொருள்::
|
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.
|
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல்வேந்தன்
உறைகடுகிஒல்லைக் கெடும்.
|
பொருள்:: |
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசுஇ தனது
பெருமையை விரைவில் இழக்கும்.
|
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
|
பொருள்:: |
யாரும் எளிதில் காண முடியாதவனாகவும்இ கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம்
குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும். |
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
|
பொருள்:: |
கடுஞ்சொல்லும்இ கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல்
அழிந்துவிடும்.
|
| |
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். |
|
பொருள்::
|
கடுஞ்சொல்லும்இ முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச்
செய்யும் அரம் எனும் கருவியாக அமையும். |
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.
|
பொருள்:: |
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு
தானாகவே வீழ்ந்து விடும். |
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
|
பொருள்:: |
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன்இ போர் வந்துவிட்டால்
அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும். |
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.
|
பொருள்:: |
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல
பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை. |
|