கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

வலியறிதல்.


 Users online ::

         

                        வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியுந் தூக்கிச் செயல்.

பொருள்::

செயலின் வலிமைஇ தனது வலிமைஇ பகைவரின் வலிமைஇ இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.


                            ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில்.

பொருள்::

ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.


                         உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.

 

பொருள்::

 தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.


                       அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.

 

பொருள்::

மற்றவர்களை மதிக்காமலும்இ தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும்இ தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.


                         பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.

 

பொருள்::

மயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.


                      நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.

 

பொருள்::

 தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டுஇ எல்லை மீறிப் போகிற ஒருவர்இ நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

              
  ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.

 

பொருள்::

வருவாய் அளவை அறிந்துஇ அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.


                         ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைn போகா றகலாக் கடை.

 

பொருள்::

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவுஇ குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.


                          அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.

 

பொருள்::

எஇருப்பதுஇ இயற்றக்கூடியதுஇ இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால்இ வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.


                          உளவரை தூக்காத ஒப்புர வாண்மை  வளவரை வல்லைக் கெடும்.

 

பொருள்::

தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்

                                                                                         

                                       

  www.nakarmanal.com