|
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.
|
பொருள்::
|
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும்
அவர் உடையவர் ஆக மாட்டார்.
|
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும
|
பொருள்::
|
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிரஇ வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது. |
ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்.
|
பொருள்::
|
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள்இ ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட
ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.
|
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
|
பொருள்:: |
உயர்வுஇ உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச்
சேரும்.
|
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
|
பொருள்:: |
தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல
மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும். |
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
|
பொருள்:: |
நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக
அந்த நினைப்பை விடக்கூடாது.
|
| |
சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. |
|
பொருள்::
|
உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்டாலும் யானையானது உறுதி தளராமல் இருப்பதுபோலஇ
ஊக்கமுடையவர்கள்இ அழிவே வந்தாலும் அதற்காகக் கவலைப்படமாட்டார்கள். |
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
|
பொருள்:: |
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள
வழியே இல்லை. |
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
|
பொருள்:: |
உருவத்தைவிட ஊக்கமே வலிவானது என்பதற்கு எடுத்துக்காட்டு: கொழுத்த உடம்பும்
கூர்மையான கொம்புகளுங்கொண்ட யானைஇ தன்னைத் தாக்க வரும் புலியைக் கண்டு அஞ்சி
நடுங்குவது தான். |
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு.
|
பொருள்:: |
மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும்
மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை. |
|