கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

தெரிந்து வினையாடல்.


 Users online ::

         

                        நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.

பொருள்::

நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்தஇ நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.


                           வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை ஆராய்வான் செய்க வினை.

பொருள்::

 வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கிஇ வளங்களையும் பெருக்கிஇ இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் திறனுடையவன்.


                         அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.

 

பொருள்::

அன்புஇ அறிவுஇ செயலாற்றும் திறமைஇ பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.


                       எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.

 

பொருள்::

 எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.


                         அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால்வினைதான் சிறந்தானென்றேவற்பாற் றன்று.

 

பொருள்::

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.


                      செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ டெய்த உணர்ந்து செயல்.

 

பொருள்::

 செயலாற்ற வல்லவனைத் தேர்ந்துஇ செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்தஇ காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

              
  இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல்.

 

பொருள்::

 ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்துஇ அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.


                         வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல்.

 

பொருள்::

ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகேஇ அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.


                          வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்குந் திரு.

 

பொருள்::

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.


                          நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு.

 

பொருள்::

உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

www.nakarmanal.com