|
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
|
பொருள்::
|
அறவழியில் உறுதியானவனாகவும்இ பொருள் வகையில் நாணயமானவனாகவும்இ இன்பம் தேடி
மயங்காதவனாகவும்இ தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு
பணிக்கு அமர்த்த வேண்டும்.
|
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.
|
பொருள்::
|
குற்றமற்றவனாகவும்இ பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே
உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். |
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
|
பொருள்::
|
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும்இ எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட
அழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட
இயலாது.
|
குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
|
பொருள்:: |
ஒருவரின் குணங்களையும்இ அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக
இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு
வரவேண்டும்.
|
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.
|
பொருள்:: |
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டுஇ அவர் தரமானவரா அல்லது
தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம். |
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
|
பொருள்:: |
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக்
கவலைப்படாமல்இ பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.
|
| |
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும் |
|
பொருள்::
|
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற
செயல்களே விளையும். |
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
|
பொருள்:: |
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்துஇ அமர்த்திக் கொண்டால்
அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும். |
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
|
பொருள்:: |
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து
பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது. |
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
|
பொருள்:: |
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும்இ ஆராய்ந்து தேர்வு செய்து
ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும். |
|