|
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
|
பொருள்::
|
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு
உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.
|
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவுந் தரும்.
|
பொருள்::
|
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு
ஆக்கமும்இ வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும். |
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
|
பொருள்::
|
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய
வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.
|
சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
|
பொருள்:: |
தன் இனத்தார்இ அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற
செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.
|
கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
|
பொருள்:: |
வள்ளல் தன்மையும்இ வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார்
சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். |
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
|
பொருள்:: |
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும்இ வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும்
ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.
|
| |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. |
|
பொருள்::
|
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும்.
அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு. |
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
|
பொருள்:: |
அனைத்து மக்களும் சமம் எனினும்இ அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப்
பயன்படுத்திக் கொண்டால்இ அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர். |
தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரண மின்றி வரும்.
|
பொருள்:: |
உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள்இ அந்தக் காரணம்
பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள். |
உழைப்பிரிந்து காரணத்தின்வந்தானை வேந்தன்இழைத்திருந் தெண்ணிக் கொளல்.
|
பொருள்:: |
ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய்இ மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தினால்
வந்தவரைஇ நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
|
|