|
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
|
பொருள்::
|
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல்
வழங்கப்படுவதே நீதியாகும்.
|
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
|
பொருள்::
|
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள்
வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. |
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
|
பொருள்::
|
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும்
அடிப்படையாக அமையும்.
|
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
|
பொருள்:: |
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி
நிற்கும்.
|
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
|
பொருள்:: |
நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அதுஇ பருவகாலத்தில் தவறாமல்
பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். |
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
|
பொருள்:: |
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும்
வளையாத செங்கோல்தான்.
|
| |
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். |
|
பொருள்::
|
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும். |
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
|
பொருள்:: |
ஆடம்பரமாகவும்இ ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து
தானாகவே கெட்டொழிந்து விடும். |
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
|
பொருள்:: |
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும்இ குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு
இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும். |
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
|
பொருள்:: |
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரைஇ ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின்
செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும். |
|