|
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
|
பொருள்::
|
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதிஇ அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத்
தீமையானது.
|
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
|
பொருள்::
|
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமைஇ அறிவை அழிப்பது போல மறதிஇ புகழை அழித்து
விடும். |
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.
|
பொருள்::
|
மறதி உடையவர்களுக்குஇ மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த
அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
|
அச்ச முடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
|
பொருள்:: |
பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண்
கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில்
இருந்தாலும் மறதி உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.
|
முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
|
பொருள்:: |
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன்இ துன்பம் வந்தபிறகு
தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும். |
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.
|
பொருள்:: |
ஒருவரிடம்இ மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால்இ அதைவிட
அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.
|
| |
அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின். |
|
பொருள்::
|
மறதியில்லாமலும்இ அக்கறையுடனும் செயல்பட்டால்இ முடியாதது என்று எதுவுமே இல்லை. |
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
|
பொருள்:: |
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்திடல் வேண்டும். அப்படிச் செய்யாமல்
புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை. |
இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
|
பொருள்:: |
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்திருப்பவர்கள்இ அப்படி மறந்துபோய் அழிந்து
போனவர்களை நினைத்துப் பார்த்துத் திருந்திக் கொள்ள வேண்டும். |
உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்.
|
பொருள்:: |
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே
நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்
|
|