|
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
|
பொருள்::
|
நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும்இ நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக்
கருதப்பட வேண்டும்.
|
எல்லார்க்கும் எல்லாம்நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
|
பொருள்::
|
நண்பர்இ பகைவர்இ நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும்இ
எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய
கடமையாகும். |
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.
|
பொருள்::
|
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத
அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்ல
|
வினைசெய்வார்தஞ்சுற்றம்வேண்டாதா ரென்றாங்கனைவரையும்ஆராய்வ தொற்று.
|
பொருள்:: |
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள்இ வேண்டியவர்இ வேண்டாதவர்இ
சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான
ஒற்றர்கள் எனக் கூற முடியும்.
|
கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
|
பொருள்:: |
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு
அஞ்சாமலும்இ என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே
ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும். |
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.
|
பொருள்:: |
ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டுஇ அதனைத் தீர
ஆராய்ந்துஇ அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டுஇ தம்மை யாரென்று
வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.
|
| |
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பா டில்லதே ஒற்று |
|
பொருள்::
|
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களைஇ அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக்
கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும். |
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
|
பொருள்:: |
ஓர் உளவாளிஇ தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி
வாயிலாகவும் அறிந்து வரச் செய்துஇ இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே
அதுஇ உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும். |
ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
|
பொருள்:: |
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும்
சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம். |
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தான் ஆகும் மறை.
|
பொருள்:: |
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால்இ ஒளிவு மறைவாக
இருக்கவேண்டிய செய்தியைஇ வெளிப்படுத்தியதாகிவிடும். |
|