கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

மடி இன்மை.


 Users online ::

         

                        குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும்.

பொருள்::

பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும்இ சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.


                            மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்.

பொருள்::

குலம் சிறக்க வேண்டுமானால்இ சோம்பலை ஒழித்துஇ ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


                         மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியுந் தன்னினு முந்து.

 

பொருள்::

 அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடிஇ அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.
 


                        குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு.

 

பொருள்::

 சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.


                         நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.

 

பொருள்::

காலம் தாழ்த்துதல்இ மறதிஇ சோம்பல்இ அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும்இ கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!


                       படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது.

 

பொருள்::

 தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

              
  இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர்.

 

பொருள்::

முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.


                         மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க் கடிமை புகுத்தி விடும்.

 

பொருள்::

பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும்இ அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.


                          குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்.

 

பொருள்::

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால்இ அவனது குடிப்பெருமைக்கும்இ ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.


                          மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு.

 

பொருள்::

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன்இ சோர்வில்லாத ஒரு மன்னன்இ அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
 

                                                                                         

                                       

  www.nakarmanal.com