|
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
|
பொருள்::
|
இறுமாப்புஇ ஆத்திரம்இ இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான்
மதிக்கத் தக்கதாகும்.
|
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
|
பொருள்::
|
மனத்தில் பேராசைஇ மான உணர்வில் ஊனம்இ மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை
தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும். |
தினைத்துணையாங் குற்றம்வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
|
பொருள்::
|
பழிக்கு நாணுகின்றவர்கள்இ தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதிஇ அதைச்
செய்யாமல்இ தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
|
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.
|
பொருள்:: |
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல்
இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
|
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
|
பொருள்:: |
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய
வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும். |
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
|
பொருள்:: |
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு
சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?
|
| |
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். |
|
பொருள்::
|
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப்
பாழாகிவிடும். |
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
|
பொருள்:: |
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள்
சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான். |
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
|
பொருள்:: |
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே
உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை
தராத செயல்களில் ஈ.டுபடக் கூடாது. |
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
|
பொருள்:: |
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப்
பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும். |
|