|
கொலைமேற்கொண்டாரிற்கொடிதேஅலைமேற்கொண்டல்லவைசெய்தொழுகும் வேந்து.
|
பொருள்::
|
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசுஇ கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக்
கொடியதாகும்.
|
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
|
பொருள்::
|
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப்
பறிப்பதுஇ வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது. |
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
|
பொருள்::
|
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு
நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
|
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
|
பொருள்:: |
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசுஇ நிதி ஆதாரத்தையும் மக்களின்
மதிப்பையும் இழந்துவிடும்.
|
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
|
பொருள்:: |
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும்
படைக்கருவியாகும். |
மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.
|
பொருள்:: |
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின்
புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
|
| |
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. |
|
பொருள்::
|
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள்
தொல்லைப்படுவார்கள். |
இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
|
பொருள்:: |
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ்
அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது. |
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
|
பொருள்:: |
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப்
போகுமாதலால்இ வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது. |
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
|
பொருள்:: |
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது;
முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.. |
|