|
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.
|
பொருள்::
|
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும்
தலையாய செல்வமாகும்.
|
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும்
|
பொருள்::
|
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை
ஏற்படும். |
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
|
பொருள்::
|
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம்
எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
|
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
|
பொருள்:: |
நூல்களைக் கற்காவிட்டாலும்இ கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால்இ அது நடை
தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.
|
இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
|
பொருள்:: |
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின்
அறிவுரையானது உதவும். |
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
|
பொருள்:: |
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற
நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
|
| |
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். |
|
பொருள்::
|
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள்இ சிலவற்றைப் பற்றித் தவறாக
உணர்ந்திருந்தாலும் கூடஇ அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். |
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
|
பொருள்:: |
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க
மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும். |
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
|
பொருள்:: |
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள்இ அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக
இருக்க இயலாது. |
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.
|
பொருள்:: |
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும்
ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான். |
|