கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

கண்ணோட்டம்.


 Users online ::

         

                      கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்::

இந்த உலகம்இ அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.


                           கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.

பொருள்::

 அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்குஇ மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.


                         பண்ணென்னாம் பாடற்கியை பின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம்இல்லாத கண். 

 

பொருள்::

இரக்க உணர்வுஇ அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும்இ பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.


                      உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்.

 

பொருள்::

அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிரஇ வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.


                         கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற் புண்ணென் றுணரப் படும்.

 

பொருள்::

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.


                      மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைடந்துகண் ணோடா தவர்.

 

பொருள்::

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

              
  கண்ணோட்டம் இல்லவர்கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.

 

பொருள்::

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.


                         கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க் குரிமை உடைத்திவ் வுலகு.

 

பொருள்::

கடமை தவறாமையிலும்இ கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.


                           ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.

 

பொருள்::

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.


                           பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.

 

பொருள்::

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள்இ தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

www.nakarmanal.com