கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

கல்வி.


 Users online ::

         

                        கற்க கசடறக் கற்பவை கற்றபின்  நிற்க அதற்குத் தக.

பொருள்::

பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.


                           எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

பொருள்::

 எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களேஇ உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.


                         கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.

 

பொருள்::

 கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.


                       உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.

 

பொருள்::

 மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும்இ பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.


                         உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர்.

 

பொருள்::

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்றுஇ மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.


                      தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

 

பொருள்::

 தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

              
  யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு.

 

பொருள்::

 கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோதுஇ ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?


                         ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்  கெழுமையும் ஏமாப் புடைத்து.

 

பொருள்::

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானதுஇ ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.


                          தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்.

 

பொருள்::

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டுஇ அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.


                          கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.

 

பொருள்::

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.

www.nakarmanal.com