கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

கல்லாமை.


 Users online ::

         

                        அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்.

பொருள்::

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.


                            கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்இல்லாதாள்பெண்காமுற் றற்று.

பொருள்::

 கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவதுஇ மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.


                         கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்.

 

பொருள்::

 கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.


                       கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங் கொள்ளார் அறிவுடை யார்.

 

பொருள்::

 கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூடஇ அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.


                         கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும்.

 

பொருள்::

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம்இ கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.


                      உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.

 

பொருள்::

 கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.

              
  நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம் மண்மாண் புனைபாவை யற்று.

 

பொருள்::

 அழகான தோற்றம் மட்டுமே இருந்துஇ ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள்இ கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.


                         நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு.

 

பொருள்::

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம்இ நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.


                          மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங் கற்றா ரனைத்திலர் பாடு.

 

பொருள்::

கற்றவர் என்ற பெருமைஇ உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.


                          விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்.

 

பொருள்::

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோஇ அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும்இ அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

                                                                                         

                                       

  www.nakarmanal.com