கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

இறைமாட்சி.


 Users online ::

         

                        படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு.

பொருள்::

ஆற்றல்மிகு படைஇ அறிவார்ந்த குடிமக்கள்இ குறையா வளம்இ குறையற்ற அமைச்சுஇ முரிபடாத நட்புஇ மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.


                           அஞ்சாமை ஈ.கை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு.

பொருள்::

 துணிவுஇ இரக்க சிந்தைஇ அறிவாற்றல்இ உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
 


                         தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு.

 

பொருள்::

 காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும்இ அறிவுடைமையும்இ துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும்இ நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.


                       அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தரசு.

 

பொருள்::

 அறநெறி தவறாமலும்இ குற்றமேதும் இழைக்காமலும்இ வீரத்துடனும்இ மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.


                         இயற்றலும் ஈ.ட்டலுங் காத்தலுங் காத்த வகுத்தலும் வல்ல தரசு.

 

பொருள்::

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்துஇ அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கிஇ அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.


                      காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்.

 

பொருள்::

 காட்சிக்கு எளிமையும்இ கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

              
  இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு.

 

பொருள்::

 வாக்கில் இனிமையும்இ பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.


                         முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும்.

 

பொருள்::

நீதிநெறியுடன் அரசு நடத்திஇ மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.


                          செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு.

 

பொருள்::

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.


                          கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.

 

பொருள்::

நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும்இ நிலையுணர்ந்து கருணை காட்டியும்இ நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும்இ மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

 

www.nakarmanal.com