|
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.
|
பொருள்::
|
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியதுஇ அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன்
இருக்கும் மனம்தான்.
|
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
|
பொருள்::
|
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள்
நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும். |
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.
|
பொருள்::
|
துன்பம் சூழும் போதுஇ துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி
அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
|
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பா டுடைத்து.
|
பொருள்:: |
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது
போலஇ விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி
கிட்டும்.
|
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
|
பொருள்:: |
துன்பங்களைக் கண்டு கலங்காதவனைஇ விடாமல் தொடரும் துன்பங்கள்இ துன்பப்பட்டு அழிந்து
விடும். |
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புதல் தேற்றா தவர்.
|
பொருள்:: |
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று
கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய்
விடுவார்களா?
|
| |
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல். |
|
பொருள்::
|
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர்இ துன்பம்
வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள். |
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்.
|
பொருள்:: |
இன்பத்தைத் தேடி அலையாமல்இ துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத்
துன்பத்தினால் துவண்டு போவதில்லை. |
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்.
|
பொருள்:: |
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள்இ துன்பம் வரும் பொழுதும் அதற்காக
வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது
எடுத்துக்காட்டு. |
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
|
பொருள்:: |
'துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்குஇ அவர்களது பகைவர்களும்
பாராட்டுகிற பெருமை வந்து சேரும். |
|