|
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்னல் லது.
|
பொருள்::
|
ஈ.டுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல்இ முற்றிலும் சரியான
இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.
|
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்
|
பொருள்::
|
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும்இ அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும்
வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும். |
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
|
பொருள்::
|
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்துஇ தம்மையும் காத்துக்கொண்டு
பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.
|
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
|
பொருள்:: |
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள்இ வெற்றி என்பதை நினைத்துக்கூடப்
பார்க்க மாட்டார்கள்.
|
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
|
பொருள்:: |
தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து
விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும். |
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து
|
பொருள்:: |
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் ஹதேர் கடலிலே ஓடாது' ஹகப்பல் நிலத்தில்
போகாது' என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.
|
| |
அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி யிடத்தாற் செயின். |
|
பொருள்::
|
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்துஇ அஞ்சாமை
ஒன்றைத் தவிரஇ வேறு துணை தேவையில்லை. |
சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
|
பொருள்:: |
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று
விட முடியும். |
சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது.
|
பொருள்:: |
பாதுகாப்புக்கான கோட்டையும்இ மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும்இ
அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான
செயல் அல்ல. |
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
|
பொருள்:: |
வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானைஇ சேற்றில் சிக்கி விட்டால்
அதனை நரிகள் கூடக் கொன்று விடும். |
|