கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

அறிவுடைமை.


 Users online ::

         

                        அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்::

பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண் அறிவு ஒன்றுதான்.


                            சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு.

பொருள்::

மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டுஇ நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.


                         ப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

பொருள்::

 எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும்இ அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.


                       எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.

 

பொருள்::

 நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.


                         உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங் கூம்பலு மில்ல தறிவு.

 

பொருள்::

உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.


                      எவ்வ துறைவ துலக முலகத்தோ டவ்வ துறைவ தறிவு.

 

பொருள்::

 உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்.

              
  அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர்.

 

பொருள்::

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.


                         அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில்.

 

பொருள்::

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.


                          எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.

 

பொருள்::

வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.


                          அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர்.

 

பொருள்::

அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லை.

                                                                                         

                                       

  www.nakarmanal.com