கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

அமைச்சு.


 Users online ::

         

                        கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு.

பொருள்::

உரிய கருவிஇ உற்ற காலம்இ ஆற்றும் வகைஇ ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.


                            வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு.

பொருள்::

அமைச்சரவை என்பதுஇ துணிவுடன் செயல்படுதல்இ குடிகளைப் பாதுகாத்தல்இ அறநூல்களைக் கற்றல்இ ஆவன செய்திட அறிதல்இ அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.


                         பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு.

 

பொருள்::

 அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல்இ நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல்இ பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.


                        தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்ல தமைச்சு.

 

பொருள்::

 ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும்இ அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும்இ முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.


                         அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ்ஞான்றுந் திறனறிந்தான்தேர்ச்சித் துணை.

 

பொருள்::

அறநெறி உணர்ந்தவராகவும்இ சொல்லாற்றல் கொண்டவராகவும்இ செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.


                       மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை.

 

பொருள்::

நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாது.

              
   செயற்கை அறிந்தக் கடைத்து முலகத் தியற்கை அறிந்து செயல்.

 

பொருள்::

செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும்இ உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.


                          அறிகொன் றறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்.

 

பொருள்::

சொன்னதையும் கேட்காமல்இ சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்குஇ அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.


                           பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.

 

பொருள்::

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.


                          முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பா டிலாஅ தவர்.

 

பொருள்::

'முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

                                                                                         

                                       

  www.nakarmanal.com