|
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
|
பொருள்::
|
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல்இ முடியும் என்ற நம்பிக்கையுடன்
முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
|
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு.
|
பொருள்::
|
எந்தச் செயலில் ஈ.டுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல்
அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும். |
தாளாண்மை என்னுந்தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
|
பொருள்::
|
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வுஇ விடா முயற்சி மேற்கொள்ளக்கூடிய உயர்ந்த
இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.
|
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்
|
பொருள்:: |
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும்இ ஒரு பேடிஇ கையிலே வாள்தூக்கி
வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
|
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.
|
பொருள்:: |
தன்னலம் விரும்பாமல்இ தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச்
சூழ்ந்துள்ள சுற்றத்தார்இ நண்பர்கள்இ நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம்
துடைத்துஇ அவர்களைத் தாங்குகிற தூணாவான். |
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
|
பொருள்:: |
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக
அமையும்.
|
| |
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள். |
|
பொருள்::
|
திருமகள்இ மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும்இ
முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும். |
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.
|
பொருள்:: |
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறுஇ அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல்
இருப்பதே பெரும்பழியாகும். |
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
|
பொருள்:: |
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது
அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும். |
ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர்.
|
பொருள்:: |
''ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி
மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள். |
|