கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

விருந்தோம்பல்


 Users online ::

         

                        இருந்துஒம்பிஇல்வாழ்வது எல்லாம்விருந்துஒம்பிவேளாண்மைசெய்தற் பொருட்டு.

பொருள்::

வீடு வாசலோடு இருந்துகொண்டு பொருட்களை பாதுகத்து மனைவி மக்களுடன் குடும்பம் நடத்துவதுதன் நோக்கமெல்லாம் வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்து உலகத்துக்கு உபகாரமாக் இருப்பதற்காகத்தான்.


                           விருந்துபுறத்ததாத் தான்உண்டல்சாவாமருத்துஎனினும் வேண்டாற்பாற்று அன்று.

பொருள்::

 (ஏதானாலும் பிறருக்கு கொடுத்து உண்ண வேண்டும்) சாகாமல் இருக்கச் செவதான தேவாமிர்தத்தை உணபதனாலும் விருந்தாளி இல்லாமல் தானே உண்பது விரும்பத்தக்கதன்று.


                        வரு விருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை பருவத்து பாழ்படுத இன்று.

 

பொருள்::

 (விருந்தாளியை உபசரிப்பதால் யாரும் கெட்டுப்போக மாட்டார்கள்) தினம் தினம் வருகின்ற விருந்தினர்களுக்கெல்லாம் உணவளித்து உபசரிக்கிறவனுடைய வாழ்க்கை அதனால் வறுமையுற்று கெட்டுப்போகுமென்பதில்லை.


                       அகன் அமர்ந்து செய்யாள்உறையும் முகன் அமர்ந்து நல் விருந்து ஒப்புவான் இல்.

 

பொருள்::

  (அப்படிப்பட்டவனுடைய வீட்டில் எது இல்லாவிட்டாலும் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும்) முக மலர்ச்சியோடு தகுதி உடைய விருந்தினர்களை உபசரிக்கிறவனுடைய வீட்டில் மனமகிழ்ச்சியோடு திருமகள் வாசம் செய்வாள்.


                         வித்தும் இடல் வேண்டும் கொல்லொ விருந்து ஒம்பி மிச்சில்  மிசவான் புலன்.

 

பொருள்::

 (அவன் தனக்குள்ளதை முகமலர்ச்சியோடு கொடுப்பவன் அத்துடன்) விருந்தினர்கட்கு உண்விட்டு மிச்சத்தை உண்பான். மிச்சம் இல்லையானால் பட்டிணியாகவும் இருந்துவிடுவான் அப்படிப்பட்டவனுக்கு அவனுடைய சொந்த நிலத்தில் விளைந்துதான் தானியம் வரவேண்டும் என்பது இல்லை.


                      செல் விருந்து ஓம்பி வரு விருந்த்து பார்த்திருப்பான் நல் விருந்து வானத்தவர்கு.

 

பொருள்::

 (அப்படிப்பட்டவன் எவ்வளவு விருந்தினர் வந்தாலும் வரவேற்பான்) வந்திருந்த விருந்தினர்களை உபசரித்து வளியனுப்பிவிட்டு. மேலும் வரக்கூடிய விருந்தினரை எதிர்பார்த்திருக்கும் மனமுடைய அவனைத் தேவர்கள் தமக்கு நல்ல விருந்தாளியாகக் கொண்டாடுவார்கள்.

              
  இனைத்துணைத்து எனபதுஒன்றுஇல்லை விருந்தின்துணைத் துணைவேள்விப் பயன்.

 

பொருள்::

  (விருந்திடுதல் என்பது பெருஞ்செலவு செய்து உயர்ந்த உண்டிகள் செவதன்று) விருந்திடுவதற்கு எவ்வளவு அவ்வளவு என்ற கணக்கில்லை. எந்த அளவுக்கு செய்தாலும் அந்த அளவுக்கு நல்ல காரியம் செய்த பலன் உண்டு.


                         பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி வேள்வி தலைப்படா தார்.

 

பொருள்::

 (இல்லறம் நடத்தி விருந்தோம்புவதேஒரு தவம்) வீட்டோடிருந்து விருந்தினரை உபசரிக்கும் நல்ல காரியத்தைச் செய்யத் தெரியாதவர்கள்தாம் ஆசைகளை எல்லாம் விட்டுவிட்டோம் என்று மிகவும் கடினமான துறவத்தை மேர்க்கொண்டு நோன்பு காப்பார்கள்.


                         உடையையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

 

பொருள்::

 (விருந்தோம்ப பணாரராக இருக்க வேண்டு மென்பதில்லை ஆனால் பணம் இருந்தும் விருந்தோம்பாவிட்டால்) விருந்தினரை உபசரிக்காதவர்கள் பணக்காரராக இருந்தாலும் அவர்கள் தரித்திரர்கள் தாம் அவர்களுக்கு முட்டாள் தனம் தான் மிச்சம்.

                          மோப்பக் குழையும் அளிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து.

 

பொருள்::

 (பணம் இருந்தோ இல்லாமலோ விருந்தினர்கள் முகம் கோணாமல் உபசரிக்க வேண்டும்) அனிச்சம் என்ற மலர், மனிதன் அதை மோந்தவுடன் வாடிப்போகும். அதைப்போல விருந்தாளிகளை விருந்திடுவோன் முகம் கோணிப் பார்த்தாலும் கூட விருந்து கெட்டுப்போகும்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com