|
செல்லிடத்துக்காப்பான்சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்.
|
பொருள்::
|
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத
இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
|
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.
|
பொருள்::
|
வலியோரிடம் சினம் கொண்டால்இ அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும்
அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை. |
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
|
பொருள்::
|
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய
விளைவுகளுக்குக் காரணமாகும்.
|
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.
|
பொருள்:: |
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய்
விடும்.
|
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
|
பொருள்:: |
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால்இ சினத்தைக் கைவிட வேண்டும்.
இல்லையேல் சினம்இ அவனை அழித்துவிடும். |
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
|
பொருள்:: |
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால்இ அது அவரை
மட்டுமின்றிஇ அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
|
| |
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. |
|
பொருள்::
|
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப்
பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும். |
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
|
பொருள்:: |
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக
வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது. |
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.
|
பொருள்:: |
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற
முடியும். |
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
|
பொருள்:: |
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர்
துறவிக்கு ஒப்பாவார். |
|