|
நடுவு இன்றி நன் பொருள் வெ/கின் குடிபொன்றிக்
குற்றம் ஆங்கே தரும்.
|
பொருள்::
|
நீதியில்லாமல் பிறருக்குச் சொந்தமான பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டால் அது
ஒருவனுடைய குடும்பத்தைக் கெடுத்துப் பல குற்றங்களையும் உண்டாக்கும்.
|
படு பயன் வெ/கிப் பழிபடுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர்.
|
பொருள்::
|
அநிஞாயம் செய்ய அஞ்சுகிறவர்கள்,
அப்போதைக்கு வரக்கூடிய நண்மைகளை மட்டும் கருதிப் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள
ஆசைப்பட்டு பழிச்சொல்லுக்கு ஆளாகக் கூடிய குறங்களைச் செய்ய மாட்டார்கள்.
|
சிற்றின்பம் வெ/கி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்படுவர்.
|
பொருள்::
|
(பழிச்சொல்லுக்கு மட்டுமல்ல, பாவம்
வருமென்று அஞ்சுகிறாவர்களுக்கு உண்டு) புண்ணியத்தால் வரக்கூடிய பேரின்பத்தை
விரும்புகிறவர்களே, உடனே கிடைக்கின்ற சிற்றின்பங்களுக்கு ஆசைப்பட்டி தர்மமல்லாத
காரியங்களைச் செய்ய மாட்டாகள்.
|
இலம் என்று வெ/குதல் செய்யார் புலம்
வென்ற புன்மை இல் காட்சியவர்.
|
பொருள்:: |
(பேரின்ப ஆசையும் கடநெத பெரியவர்கள் உண்டு.) ஐம்புல
ஆசைகளையும் அடக்கி வென்றுவிட்ட குற்ற மற்ற அறிவுடையவர்கள் செல்வம் இல்லையே
என்பதற்க்காக பிறருடைய பொருளைக்கவர்ந்து ஆசைப்பட மாட்டார்கள்.
|
அ/கி அகன்ற அறிவு என் ஆம் யார்
மட்டும் வெ/கி வெறிய செயின்.
|
பொருள்:: |
(கூர்ந்த
படிப்புள்ளவர்களிலும் பலர் வெ/குகின்றார்களே)
கூர்ந்து கவனித்து கல்வி கற்று விரிந்த அறிவுடையவர்கள் யாரானாலும் அவர்கள் பிறர்
பொருளைக் கவர ஆசை கொண்டு வெறித்த செயல்களைச் செய்வாரானால் அவர்களுடைய அறிவு
எதற்க்காகும்?
|
அறன் வெ/கி ஆற்றின்கண் நின்றான்
பொருள் வெ/கிப் பொல்லாத சூழக் கெடும்.
|
பொருள்:: |
(கல்வியறிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும்
இல்லறத்தான் தெய்வக்கருணையை நம்பினவன்.) தெய்வக் கருணையை நாடி இல்லற நெறி தவறாமல்
வாழ்க்கை நடத்துகிறவன், பொருளில் ஆசைகொண்டு பொல்லாத செய்ய நினைத்தால்
கெட்டுப்போவான்.
|
| |
வேண்டற்க வெ/கி ஆம் ஆக்கம் வினைவயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன். |
|
பொருள்::
|
(கருணை வாழ்க்கையுடன் இல்லறம்
கெட்டுப்போவது மட்டுமன்றி) பிறருடைய
பொருளைக் கவர்ந்து வருவதாகிய செல்வத்தை
விரும்பக்கூடாது.ஏனெனில் அப்படி வரும்
செல்வத்தின் பயனாக ஒருவனுடைய செல்வ நிலை
உயர்ந்துவிடாது. |
அ/காமை செல்வத்திற்கு யாது எனின்
வெ/காமைவேண்டும் பிறன் கைப்பொருள்.
|
பொருள்:: |
(செல்வம்
உயராது மட்டுமல்ல. உள்ள செல்வமும் அதனால்
போய்விடும் ஆகவே) குறையாத செல்வம்
எதுவென்றால் இன்னொருவனுக்கு சொந்தமான
பொருளை அபகரிக்க நினைக்காமலிருப்பதுதான். |
அறான் அறிந்து வெ/கா அறிவு உடையார்ச்
சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு.
|
பொருள்:: |
தர்மத்தை உனர்ந்து பிறருடைய பொருளை
அபகரிக்கும் ஆசைகொள்ளாத அறிவுடயவர்களுடைய தகுதிக்குத் தக்கபடி செல்வ மகள் தானகவே
அவருடம் வந்து சேருவாள்.
|
இறல் ஈனும் எண்ணாத வெ/கின் விறல்
ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு.
|
பொருள்:: |
(ஆகையினால்) ஆலோசனை செய்யாமல் பிறருடைய
பொருளைக் கவர்ந்துகொள்ல ஆசைகொண்டால், உள்ள செல்வமும் அற்றுப்போகும், அபகரித்து
வரும் செல்வத்தை வேண்டாமென்று விலக்கி விடுதலே தரும்.
|
|