கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

வான் சிறப்பு


  Users online ::

                             

               வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தாழ் அமிழ்த்தம் என்று உணரல் பாற்று.

பொருள்::

அமிர்தம் என்பது அதை உண்டவர்களை அழியாதிருக்கச் செய்வது போல உயிர்கள் இருந்துகொண்டேயிருக்கும் படி உலகத்தை அழிவின்றி வாழ வைப்பது மழை. அதனால் மழை அமிர்தத்துக்கு ஒப்பானது.

                           துப்பார்க்கு துப்பு ஆய துபு ஆக்கித் துர்ப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை.

பொருள்::

எப்படி என்றால் உணவினால் உயிர் வாழ வேண்டிய மனிதர்களுக்கு உண்வை உற்ப்பத்தி செய்வதும். அந்த உணவை உண்ணும் போது தாகம் தீர்க்கத்தானே ஓர் உண்வாக உதவுவதும் மழைத்தண்ணீதான்.

                       விண் என்று பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து உள்நின்று உடற்றும்பசி.

 

பொருள்::

இந்த உலகம் மிகப் பெரிய கடலால் சூழப்பட்டதாக இருந்தாலும், வானத்தில் இருந்து மழை பெய்யாவிட்டால் கடலோரம் தவிர மற்ற உள்நாடுகளிலெல்லாம் உணவில்லாமல் உயிர்களைப் பசி வதைத்துவிடும்.


                       ஏரின் உழா அர் உழவர் புயல் என்னும் வாரி வளம் கின்றிக்கால்.

 

பொருள்::

ஏனெறால், மழை வராவிட்டால் உழவர்கள் ஏர் உழுது உணவுப் பயிர்களை விளைவிக்க முடியாது.


                          கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை

 

பொருள்::

பஞ்சத்தால் உலக மக்களை தவிக்கச்செய்வதும் அப்படித்தவிக்கின்றவர்களின் துன் பங்களை நீக்கித் துணை புரிந்து தூக்கி விடுவதும் எல்லாம் மழைதான்.


                        விசும்பின் துளி விழின் அல்லால் மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது.

 

பொருள்::

(மழயில்லாமல் ஏர் உழுது உணவைப் பயி செய்ய முடியாதென்றாலும் வேறு ஏதாவது இலை, காய் முதலியவைகளையாவது உண்டு உயி வாழலாமென்றாலும்) வானத்தில் இருந்து மழைத்துளி விளாமல் புல் பூண்டுகூட முளைக்காது (அப்படியிருக்க இலையும் காயும் எப்படி கிடைக்கும்?  )


              
  நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடித்து எழிலி தான் நல்காது ஆகிவிடின்.

 

பொருள்::

கடலில் இருக்கின்ற தண்ணீரை ஆவியாக்கி ஆகாயத்திற்கு கொண்டு போகின்ற மேகங்கள் ஒன்றாய்ச் சேர்ந்து இடி இடித்து மழைபெய்யாமல் இருந்துவிடுமானால் கடலும் கூடக் குறைந்து வறண்டுபோகும்.


                           சிறப்போடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் உண்டு.

 

பொருள்::

(வானத்தில் இருந்து மழை பொழிவதால்தான், வானத்தில் தெய்வங்கள் இருப்பதாக வானத்தை வணங்கு கிறார்கள்.அதனால்) வானம் மழை பெய்யாமல் வறண்டு விட்டால் வானவர்கள் என்ற தேவர்களுக்குச் சிறப்பான விழாக்களும் பூசைகளும் நடாத்தமாட்டார்கள்.


                         தாளம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்,

 

பொருள்::

 (வானவர்க்குப் பூசை செய்வது மட்டுமன்று) மனிதனுக்கு மனிதன் உதவி செஉய்யும் தான தர்மங்களும், மனிதன் தனக்கே நண்மை யென்று செய்கின்ற தவமும் உலகத்தி மழை இல்லாவிட்டால் நடைபெறா.


                          நீர் இன்று அமையாது உலகு எனின் யார்யார்க்கும் வான் இன்றி அமையாது ஒழுக்கு.

 

பொருள்::

ஆகையினால் நீரில்லாமல் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது. அந்த நீரும் (வாய்க்கால்களை வெட்டியும்,மலைகளை குடைந்தும்,அணைகள் போட்டும் இன்னும் பல வழிகளில்) யார் யார் எப்படி முயன்றாலும், மழையில்லா விட்டால் கிடைக்காது.

 


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com