கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

வாழ்க்கத் துணைநலம்


 Users online ::

         

                        மனைத்தக்க மாண்பு உடையள் ஆகிதற் கொண்டான் ளத்தக்காள்வாழ்க்கைத் துணை.

பொருள்::

குடித்தனத்துக்கு ஒத்த பெருமையுடையவளும், தன்னுடைய கணவருடைய வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்கிறவளுமான மனைவியே சரியான வாழ்க்கைத்துணைவி.


                           மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்.

பொருள்::

(குடுமத்தின் பெருமைக்கு,மனைவிதான் காப்பாளி) குடும்பத்துக்கு பெருமை உண்டாக்கக் கூடிய நற்குனங்கள் மனைவியிடத்தில் இல்லாமற் போனால் வேறு என்ன சிறப்புகள் எவ்வளவுஇருந்தாலும்பயனற்றவையாகும்

                        இல்லது என் இல்லாள் மாண்பு ஆனால் உள்ளது என் இல்லவள் மாணாக் கடை.

 

பொருள்::

 (மற்ற எது இல்லாவிட்டாலும்) குடும்பத்துக்கு பெருமைதரும் குணங்கள் மட்டும் மனைவியிடத்தில் இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது ஒன்றும் இல்லை.அந்த நற்குணங்கள் மனைவியிடத்தில் இல்லாமற்போனால் அங்கே என்ன இருந்தாலும் ஒன்றும் இல்லாதது போன்றுதான்..


                       பெண்ணில் பெருந்தக்கயாஉள கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்?

 

பொருள்::

கற்பு என்ற மன உறுதியுள்ளபெண்ணைக்காட்டிலும் பெருமைதரக்கூடிய பொருள் உலகத்தில் வேறு என்னைருக்கிஅது? ஒன்றுமில்லை என்க.


                         தெய்வம் தொழாள் கொழுநன் தொழுது எழுவான்பெய் எனப் பெய்யும் மழை.

 

பொருள்::

 (கற்புடைய மனைவியின் சிறப்பு என்ன வெனில்) கற்புடைய பெண் தெய்வத்தைக்கூடத் தொழமாட்டாள். அவள் கணவனையே தெய்வமாக வணங்கிச் சிறப்படைவாள்.அப்படிப்பட்டவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் படியான தெய்வ பலம் உள்ளவள்.


                        தற்காத்துத் தற் கொண்டான் பேணி. தகை சான்ற சொற்கத்து, சோர்வு இலாள் பெண்.

 

பொருள்::

(அப்படிக் கணவனையே தெய்வமாக வணங்காவிட்டாலும் குறைந்த பட்சமாக) தன்னுடைய பெண் தனமையைத் தானே காத்துக்கொள்ளக்கூடியவளாகவும், கணவனுடைய சுக செளரியங்களைக் கவனிப்பவளாகவும், திருமண ஒப்பந்த சத்தியத்தைக் காக்கக்கூடியவளாகவும் இருப்பதில் சோர்வில்லாதிருப்பவளே ந்ல்ல மனைவி.

              
  சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளீர் நிறை காக்கும் காப்பே தலை.

 

பொருள்::

 (அவள் தனக்குத்தானே காவல்) பெண்களை வெளியே போக விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறைவைத்துக் காக்கின்ற காவல் எதற்க்காம்? தங்களை தாங்களே காத்துக்கொள்கிற அவர்களுடை கற்புணர்ச்சிதான் அவர்களுக்கு சிறந்த காவல்.


                         பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப் புத்தெளிர் வாழும் உலகு.

 

பொருள்::

 பெண்கள் பெரிஞ்சிறப்பாகிய கற்பு உள்ள பெண்களை மனைவியாக அடிந்தால், அப்படிப்பட்ட கணவன் மார்கள் தேவலோக இன்பத்தை இங்கேயே அடைவார்கள்.


                         புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகள்வார்முன் ஏறுபோல் பீடு நடை.

 

பொருள்::

 (மனைவி கற்புடையவளாக அமையாவிட்டால்) பெண்களுக்கு புகழ்தரும் கற்ப்புக்குணம் இல்லாத பெண்ணை மனைவியாகக் கொண்டுவிட ஒருவனை அதற்க்காக யாரேனும் ஏளனம் செய்தால், அப்படி ஏளனம் செய்கிறவர்களுக்கு முன்னால் அவன் ஆண் பிள்ளைக்குரிய கம்பீரத்தோடு நிமிர்ந்து நடக்க முடியாமல், தலை குனிய வேண்டியதுதான்.


                          மங்கலம் என்ப மனையாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு.

 

பொருள்::

(ஆகையினால்) குடும்பத்துக்கு எல்லா நண்மைகளையும் உண்டாக்கக்கூடிய மங்கலப் பொருள் மனைவியாளின் பெருமைதான். அந்தப் பெருமைக்கு அழகு தரும் ஆபரணங்கள்ம் மக்களை பெறுவதுதான்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com