கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

ஊழ்.


 Users online ::

         

                        ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்று மடி.

பொருள்::

ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.


                         பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூ ழுற்றக் கடை.

பொருள்::

 அழிவுதரும் இயற்கை நிலைஇ அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலைஇ அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.


                         நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.

 

பொருள்::

 கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.


                       இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.

 

பொருள்::

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும்இ ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.


                         நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்  நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

 

பொருள்::

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும்இ தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.


                      பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம.

 

பொருள்::

 தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

              
  வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

 

பொருள்::

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும்இ அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.


                         துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின்.

 

பொருள்::

நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால்இ தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.


                          நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்.

 

பொருள்::

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள்இ தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?


                          ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.

 

பொருள்::

இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும்இ இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?


  Back<<                                                                                                                                                                   www.nakarmanal.com