|
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.
|
பொருள்::
|
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும்இ குறிப்பிட்ட அந்தப்
பற்று காரணமாக வரும் துன்பம்இ அவனை அணுகுவதில்லை.
|
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈ.ண்டியற் பால பல.
|
பொருள்::
|
ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக்
துறந்து விடுவானேயானால்இ அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும். |
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
|
பொருள்::
|
ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும்இ அப்புலன்கள் விரும்புகின்றவற்றையெல்லாம்
விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.
|
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
|
பொருள்:: |
ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஓன்றன் மேல் பற்று வைப்பினும்இ
அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.
|
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை.
|
பொருள்:: |
பிறந்ததால் ஏற்படும் துன்பத்தைப் போக்க முயல்கின்ற துறவிகளுக்கு அவர்களின் உடம்பே
மிகையான ஒன்றாக இருக்கும்போதுஇ அதற்கு மேலும் வேறு தொடர்பு எதற்காக? |
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்.
|
பொருள்:: |
யான்இ எனது என்கின்ற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன்இ வான்புகழையும் மிஞ்சுகின்ற
உலகப் புகழுக்கு உரியவனாவான்.
|
| |
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. |
|
பொருள்::
|
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன. |
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
|
பொருள்:: |
அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு
துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள். |
ற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
|
பொருள்:: |
பற்றுகளைத் துறந்துவிட்டால்இ பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை.
இல்லையேல்இ அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும். |
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
|
பொருள்:: |
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும்.
துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை
நிற்கும். |
|