கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

தீவினயச்சம்


 Users online ::

         

                        தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.

பொருள்::

    பிறருக்கு தீங்கு செய்வதனால், தமக்கு வரக்கூடிய பாவம் என்னும் ஒரு வல்லமையுள்ளசக்திக்கு, தீங்கு செய்யும் இயல்புள்ளவர்கள் அஞ்சுவதில்லை. ஆனால் நல்லவர்கள் அதற்கு அஞ்சவேண்டும்.


                           தீயவை தீய பயத்தலான் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

பொருள்::

 (தீமை செய்வது நெருப்பை விடக்கொடியது.) நெருப்பு மற்றப் பொருள்களை எரித்து சாம்பலாக்குமேயன்றி நெருப்பு வைத்தவனை ஒன்று செய்யாது. ஆனால் பிறருக்கு தீமை செய்வது தனக்கே தீமை உண்டாக்குமாகையால், அது நெருப்பை விடக் கொடியது என்று அதற்கு அஞ்ச வேண்டும்.


                      அறிவினுள் எல்லாம்  தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.

 

பொருள்::

(அதனால்) அறிவுகளுக்கெல்லாம் மிகச் சிறந்த அறிவு எதுவென்றால் பகைவருக்குக்கூடத் தீங்கு செய்யக் கூடாது என்பதே.


                       மறந்தும் பிறன் கேடும் சூழற்க சூழின் அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு.

 

பொருள்::

   மறந்தார்போலக்கூடப் பிறனெருவனுக்குக் கேடு உண்டாக்க நினைக்கக்கூடாது. நினைத்தால் அப்போதே தர்ம தேவதை அப்படி நினைக்கிறவனுக்கு கேடுண்டாக்க நினைத்துவிடும்.


                         இலன் என்று தீயவை செய்யற்கசெய்யின் இலன் ஆகும் மற்றும் பெயர்த்து.

 

பொருள்::

  (ஏழையாக இருந்தாலும்) பொருள் இல்லையே என்பதற்குத் தீமை எதையும் செய்துவிடக்கூடாது. செய்தால் பொருள் இல்லாததோடு மற்ற எதுவும் இல்லாது போய்விடும்.


                      தீப் பால தான் பிறர்கண் செய்யற்க நோய்ப் பால தன்னை ஆடல் வேண்டாதான்.

 

பொருள்::

(பிறருக்கு தீமை செய்தாலும் செல்வம் வருவது நிச்சயமல்ல. ஆனால் துன்பம் வருவது நிச்சயம் அதனால்) துன்பம் உண்டாக்கக் கூடிய தீவினைப் பயன்கள் பின்னால் தன்னை வருத்தப்படாமல் இருக்க விரும்புகின்றவன், பிறருக்குத் தீமை செய்யாமலிருக்க வேண்டும்.

              
  என்னைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை வியாது பின் சென்று ஆடும்.

 

பொருள்::

   (ஏனென்றால்) எப்படிப்பட்ட பகைவர்களிடத்திலும் தப்பிக்கொள்ளலாம். ஆனால் தீவினைப் பயன் என்ற பகை நாம் எங்கே போய் ஒழிந்தாலும் நம்மை விடாமல் பின் தொடரும்.


                      தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வியாது அடி உறைந்தற்று.

 

பொருள்::

 (எப்படியென்றால்) தீமை செய்கிறவன் தீமயே அடைவான் என்பது அவனுடைய நிழல் அவன் எங்கே போனாலும் அவனை விட்டு விலகாமல் அவன் பாதங்களோடு சேர்ந்தே இருப்பது போல விலக்க முடியாது.


                        தன்னைத் தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் துன்னற்க தீவினைப் பால்.

 

பொருள்::

 பிறருக்கு தீமை செய்யாதிருப்பது பிறருடைய நண்மைக்காக அல்ல. தன்க்கு துன்பம் வரக்கூடாதென்று. தன்னைத் தானே நேசிக்கிறவன் பிறருக்கு தீங்குண்டாக்கும் செயல்களின் பக்கத்திற்க்கு கூட நெருங்கக்கூடாது.


                         அருங் கேடன் என்பது அறிக மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின்.

 

பொருள்::

 (அதனால்)ஆத்திரப்பட்டு பிறருக்கு தீமைசெய்யாமல் இருப்பவனே தனக்கு ஒரு துன்பமும் வராமல் இருக்கக்கூடியவன் என்பதை அறிய வேண்டும்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com