|
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
|
பொருள்::
|
எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும்இ எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல்
இருப்பதும்தான் தவம என்று கூறப்படும்.
|
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.
|
பொருள்::
|
உறுதிப்பாடும்இ மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே
கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள்இ தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும். |
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்.
|
பொருள்::
|
துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க
வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.
|
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
|
பொருள்:: |
மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான்இ
எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.
|
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈ.ண்டு முயலப் படும்.
|
பொருள்:: |
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால்இ அது விரைந்து
முயன்று செய்யப்படுவதாகும். |
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
|
பொருள்:: |
அடக்கமும்இ அன்பு நெறியும்இ துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம்
மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள்இ ஆசையால்
அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈ.டுபடுபவர்கள்.
|
| |
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. |
|
பொருள்::
|
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத்
துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே
உயர்வார்கள். |
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
|
பொருள்:: |
தனது உயிர்'' என்கிற பற்றும்இ தான் என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம்
புகழ்ந்து பாராட்டும். |
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
|
பொருள்:: |
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும்
ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள். |
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
|
பொருள்:: |
ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம்இ மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும்இ
உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான். |
|