கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

செய்ந்நன்றி அறிதல்.


 Users online ::

         

                        செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.

பொருள்::

நம்மிடத்தில் ஓர் உதவியும் முன்னால் பெறாதவராக இருந்தும் தக்க சமயத்தில் ஒருவர் நமக்கு தாமாகவே செய்கிற உதவிக்கு ஈடாக மண்ணுலகம், விண்ணுலகம் இரண்டையும் கொடுத்தாலும் போதாது.


                           காலத்தாற் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தில் மாணப் பெரிது.

பொருள்::

ஒருவர் செய்த உதவி சிறியதாக இருந்தாலும் அது செய்யப்பட்ட சமய சந்தர்ப்பத்தை ஒட்டி அதை இந்த உலகத்தை விடப் பெரிதாக மதிக்க வேண்டும்.


                        பயன் தூக்கார் செய்த உதவிநயன் தூக்கின் நண்மை கடலின் பெரிது.

 

பொருள்::

 பிரதிப் பிரயோசனத்தைக் கருதாமல் செய்கிற உதவியிலுள்ள அன்பை அளக்கப்போனால் அது கடலை விடப் பெரியதாக, அளக்க முடியாதாகும்.


                       தினைத் துணை நன்றி செயினும் பனைத் துணையாக் கொள்வர் பயன் தெரிவர்.

 

பொருள்::

 உதவியின் பயனை உணரக்கூடியவர்கள் ஒருவர் தமக்குச் செய்த உதவிதினயளவு சிறியதானலும் அதப் பனையளவாக உயர்த்திப் பாரட்டுவார்.


                         உதவி வரைத்து அன்று உதவி உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.

 

பொருள்::

 உபகாரத்தின் மதிப்பு உபகாரம் எவ்வளவு என்பதைப் பொறுத்ததல்ல. உபகாரத்தைப் பெற்றுக்கொண்டவனுடைய குணம் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதுவும் பெரிதாகும்.


                      மறவற்க, மாசு அற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு.

 

பொருள்::

(உதவி செய்தாலும் செய்யாவிடினும்) குற்றமற்ற நல்லவர்களுடைய நட்பை ஒரு போதும் மறக்க்கக் கூடாது. ஆனால் துன்பக் காலத்தில் உதவி செய்தவர்கள் குற்றமுள்ளவர்களானாலும் அவர்களுடைய நட்பை தள்ளி விடக்கூடாது.

              
  எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம் கண் விழுமம் துடைத்தவர் நட்பு.

 

பொருள்::

 (ஏன் எனில்) துன்பக்காலத்தில் வந்துதவி செய்து துன்பங்களைத்துடத்து விட்டவர்களுடைய உறவை நன்றி உள்ளவர்கள் ஏழேழு தலைமுறைக்கும் நினைத்துப் பார்ப்பார்கள்.


                         நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது அன்றே மறப்பது நன்று.

 

பொருள்::

 (துன்பக்காலத்தில் உதவினவர்கள் பிற்காலத்தில் ஒரு குற்றம் செய்துவிட்டாலும்) துன்பக்காலத்தில் செய்துவிட்ட உதவியை மறப்பது நல்லதல்ல. பின்னால் அவர்கள் செய்யும் குற்றத்தை  உடனே மறந்துவிடுவது நல்லது.


                         கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்.

 

பொருள்::

ஒருவன் கொலை செய்துவிடுவதப் போன்ற துன்பத்தை செய்து விட்டாலும் அவன் முன் நம்முடைய துன்பக்காலத்தில் உதவி செய்த அந்த ஒன்றை நினைத்துப்பார்த்தால் இப்போது அவன் செய்த துன்பங்கள் மறைந்துவிடும்.

                          எந்நன்றிகொன்றார்க்கும்உய்வுஉண்டாம் உய்வுஇல்லை செய்நந்றிகொன்ற மகற்கு.

 

பொருள்::

(துன்பகாலத்தில் அவன் செய்த நன்றிக்காகப் பின்னால் செய்த துன்பத்தை முற்றும் மறந்துவிட முடியாவிட்டாலும் அவனுக்குத் திருப்பித் துன்பம் செய்யாமலாவது இருக்க வேண்டும். ஏன் எனில்) எந்த நன்மையை அளித்துவிட்டவனுக்கும் அதனாலுண்டாகும் தீவினையிலிருந்து தப்பிக்கொள்ள வளியுண்டு. ஆனால் துன்பக்காலத்தில் செய்த உதவியை அழித்து. உதவி செய்தவனுக்குத் தீமை செய்வோனுக்குத் தப்பிர்த்துக்கொள்ள மார்க்கம் இல்லை.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com