|
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு.
|
பொருள்::
|
(ஒப்பரவறிதல் என்பது என்னவென்றால்) பிரதிபலனைக்
கருதாமல் ஒருவன் தான் செய்ய வேண்டிய கடமை. பிறருக்கு உதவி செய்வது. மழை பெய்கின்ற
மேகம் உலகத்தாரிடம் என்ன பிரதி யுபகாரத்தை எதிர்பார்த்துப் பெய்கிறது?
|
தாள் ஆற்றித்தந்த பொருள்எல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
|
பொருள்::
|
(ஒப்பரவறியும் குணம் மிகுந்தவர்கள் எப்படி
எண்ணுவார்களென்றால்) பாடுபட்டுச் சம்பாதிக்கின்ற செல்வமெல்லாமுதவி
பெறத்தகுந்தவர்களுக்கு உதவி செய்வதற்காகத்தான்.
|
புத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே ஒப்பரவின் நல்ல பிற.
|
பொருள்::
|
தேவலோகத்தினாலும்
பூலோகத்தினாலும் பரோபகாரம்செய்யும் குணத்தைவிட மேலானது வேறு ஒன்றும் இல்லை.
|
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்.
|
பொருள்:: |
(பிறருடைய
துன்பங்களைக் கண்டாலும் மனம் இரங்காதவர்கள் இருக்கிறார்களே) தனக்கு
ஏற்ப்படும் இன்ப துன்பங்களே ம்ற்றவர்களுக்கும் என்று பிறருடைய துன்பத்தை உணர்ந்து
உதவி செய்கிறவன்தான் உயிருள்ள மனிதன். அந்த உணர்ச்சி இல்லாதவன் செய்த பிணத்துக்கே
ஒப்பானவன்.
|
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு அவாம் பேர் அறிவாளன் திரு.
|
பொருள்:: |
(அளந்து
கொடுக்கிற அறிவாளியின் ஒப்பரவு எப்படி
என்றால்) உலகத்தார் விரும்பத்தக்க நல்ல
அற்வாளியிடத்தில் செல்வமிருப்பது
ஊரிலுள்ளவ்ர்களுக்கு அவரவர்கள் தேவைக்கு
தக்கபடி குடி தண்ணீர் கொடுத்துதவுகிர
குளத்தில் நீர் நிறைந்திருப்பது போன்றது. |
பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்செல்வம் நயன் உடையான்கண் படின்.
|
பொருள்:: |
அறிவு கொண்டு உபகாரம் செய்கிறவனைவிட
உயர்ந்தவனாகிய அன்பு கொண்டு உபகாரம் செய்கிறவன் ஒப்பரவு எப்படியென்றால்)
அன்புடையவரிடத்தில் செல்வமிருந்தால், நல்ல பழந்தரக்கூடிய மரம் நடு ஊரில் பொது
நிலத்தில் பழுத்திருப்பது போல் அவர்கள் விரும்பியபடி அவர்களிடைய தேவைகளுக்கு
அதிகமாகவும் அவர்களே எடுத்துக்கொள்ள உதவும்.
|
| |
மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். |
|
பொருள்::
|
(அறிவாளிக்கும்
அன்பாளிக்கும் உயர்ந்தவனாகிய தியாகியின்
ஒப்பரவு எப்படியென்றால்)
பெருந்தன்மையுள்ளவனிடத்தில் செல்வம்
இருந்தால், மூலிகைச்செடியானது தன் இலை, பூ
காய் பட்டை முதலியவைகளை மருந்துக்கென்று
கொடுத்துக் கடைசியில் வேரோடும்தன்னைப்
பிடுங்கிக்கொள்ளவும் உதவுவது போலத்
தன்னையேகூட அழித்துக்கொண்டு பிறருக்கு
உபகாரமாகும். |
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடன் அறி காட்சியவர்.
|
பொருள்:: |
(மனிதப்
பிறவியின் கடமைகளை அறிந்தவர்கள் பிறர்க்கு
உபகாரம் செய்யச் செல்வமுள்ளவ்ர்களாக
இருக்க வேண்டிய அவசியமில்லை) கடமையை
உணரும் அறிவுடையவர்கள் செல்வம்
இல்லாவிட்டாலும் உபகாரம் செய்யப்
பின்வாங்கமாட்டார்கள். |
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயு நீர செய்யாது அமைகால ஆறு.
|
பொருள்:: |
ஒப்புரவு அறிந்த இரக்கமுள்ளவன் தன்னை ஏழையென்று
எண்ணுவது பிறருக்கு உபகாரம் செய்ய முடியாத சமயத்தில் தான்.
|
ஒப்புரவினால் வரும்கேடு எனின் அ/து ஒருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
|
பொருள்:: |
பிறருக்கு உபகாரம் செய்வதனால் வறுமயே
வருமென்றாலும் அப்படிப்பட்ட வறுமை விலை கொடுத்தாவது வாங்கிக்கொள்வதில் நண்மையுண்டு.
|
|