|
ஒழுக்கம் விருப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
|
பொருள்::
|
ஒருவன்க்கு மேன்மை உண்டாக்குவது நல்ல நடத்தைதான்,
அதனால் நல்ல நடத்தையை உயிரை விடச் சிறந்ததாகப்பாது காக்க வேண்டும்.
|
பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித் தேரினும் அ/தே
துணை.
|
பொருள்::
|
உடல் வருந்தியாவது மிகவும் கருத்தாக
ஒழுக்கம் என்னும் நன்னடத்தையை வளர்க்க வேண்டும். எத்துணை நூல்களைப் படித்து எவ்வளவு
சிந்தனை செய்து ஆராய்ந்துபார்த்தாலும் நல்லொழுக்கந்தான் ஒருவனுக்கு துணை
புரியக்கூடியது.
|
ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்
|
பொருள்::
|
(குலமும்
ஒழுக்கத்தால்தான்) உயர்ந்த குலம் என்பதே உயர்ந்த ஒழுக்கத்தினால்தான்.
ஒழுக்கத்தில் தாழ்ந்தால் குலத்திலும் தாழ்ந்தவனாகிவிடுகிறான்.
|
மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம்
குன்றக் கெடும்.
|
பொருள்:: |
(பார்ப்பான்
உயர்ந்த குலத்தான் என்பது அவன் வேதம் ஓதுவதால் அன்று) வேதம் ஓதுவதை
மறந்துவிட்டாலும் குற்றமில்லை. பிராமணன் தன்னுடைய ஒழுக்கத்தில் குறைந்தால் அவன்
உயர்குலத்தான் என்பது அளிந்து போகும்.
|
அழுக்காறுஉடையான்கண்ஆக்கம்போன்றுஇல்லை ஒழுக்கம்இல்லான்கண்
உயர்வு.
|
பொருள்:: |
(பிறாப்பின் மேன்மை
மட்டுமல்ல) பொறாமை உள்ளவ்னுக்குச் செல்வம் சேராது.சேர்ந்தாலும் நிலைக்காது. அது போல
ஒழுக்கம் இல்லாதவனுக்கு மேன்மை இருக்காது இருந்தாலும் தங்காது.
|
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து.
|
பொருள்:: |
(ஒழுக்கம் என்பது ஒருவன் செய்கிறஒவ்வொரு
செய்கைபற்றியதனால்தான் சிரமமாக இருக்கும்) இருந்தாலும் ஒழுக்கம் கெடுவதால்
வரக்கூடிய குற்றங்களை அறிந்து அறிவுடையோர்கள் ஒழுக்கத்தில் தளரமாட்டார்கள்.
|
| |
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப்பழி. |
|
பொருள்::
|
(சாதாரண மனிதர்கள் ஒழுக்கம் கெட்டு
விட்டால் அதை யாரும் பொருட்
படுத்தமாட்டார்கள். ஆனால்)
ஒழுக்கத்துக்காகவே மேன்மைப்
படுத்தப்பட்டவர்கள் ஒழுக்கம் கெட்டால்
அவர்கள் மற்றவர்கள் அடையாத பெரும் பழிக்கு
ஆளாவார்கல். |
நன்றிக்கு வித்து ஆகும்நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் என்றும் இடும்மை
தரும்.
|
பொருள்:: |
(ஒழுக்கத்தால்
மேன்மை அடைவது மட்டுனன்றிப்பின்னால் பல
நண்மைகளும் உண்டாகும்) நல்ல நடத்தையினால்
உடனேநண்மைகள் கிடைக்காவிட்டாலும்பின்னால்
நண்மைகள் முளைப்பதற்கு அது விதை
தெளிப்பதாகும். ஆனால் தீய ஒழுக்கத்தால்
உடனேயும் துன்பமுண்டாகும். பின்னாலும்
துன்பம் வரும். |
ஒழுக்கம் உடையார்க்குஒல்லாவே தீய வழுக்கியும் வாயால்சொலல்.
|
பொருள்:: |
(அதனால்) நல்லொழுக்கத்தை
விரும்புகின்றவர்கள் தீய ஒழுக்கத்தைச் சேர்ந்த பேச்சுக்களை வாய்திறந்துகூட
பேசமாட்டார்கள்.
|
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவில்லாதார்.
|
பொருள்:: |
(நல்லொழுக்கத்துக்கான பழக்க
வழக்கங்களையும் இடம், காலம் அறிந்து செய்ய வேண்டும்) எவ்வளவு படித்திருந்தாலும்
உலகப் போக்கை ஒட்டி நடந்துகொள்ளத் தெரியாதவர்கள் நல்லொழுக்கத்தை அறியாதவர்கள்.
|
|