|
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
|
பொருள்::
|
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
|
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று.
|
பொருள்::
|
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவதுஇ கூத்து முடிந்ததும் மக்கள்
அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும். |
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
|
பொருள்::
|
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே
நிலையான நற்செயல்களில் ஈ.டுபட வேண்டும்.
|
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.
|
பொருள்:: |
வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள்இ நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக்
குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.
|
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்.
|
பொருள்:: |
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை
ஆற்றிட முனைய வேண்டும். |
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
|
பொருள்:: |
இந்த உலகமானதுஇ நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற
அகந்தையைப் பெருமையாகப் கொண்டதாகும்.
|
| |
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல. |
|
பொருள்::
|
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களேஇ ஆசைக்கோர்
அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள். |
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.
|
பொருள்:: |
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு
போன்றதுதான். |
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
|
பொருள்:: |
நிலையற்ற வாழ்க்கையில்இ உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு;
திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு. |
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு.
|
பொருள்:: |
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது. |
|