கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

நீத்தார் பெருமை


  Users online ::

         

                        ஒழுக்கத்து தீத்தார் பெருமை விழுப்பது வேண்டும் பனுவல் துணிவு.

பொருள்::

எஒழுக்கம் தவறாமல் ஆசாபாசங்களை நீக்கி வாழ்ந்து சென்ற மகான்களின் பெருமையை போற்றுவது நன்மைதரக்கூடியது அதை முதலில் செய்யவேண்டும்.

                           துறந்தார் பெருமைதுணைக் கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டாற்று.

பொருள்::

முற்றுந் துறந்த அம்மகான்களின் பெருமை அளவிட முடியாதது. அதைக் கணக்கெடுப்பது உலகத்தி எவ்வளவு மனிதர்கள் பிறந்து இறாந்தார்கள் என்பதைக் கணக்கெடுக்கப் புகுவதற்கு ஒப்பாகும்.

                        இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு

 

பொருள்::

பிறப்பு இறப்பு என்ற இரண்டின் தத்துவங்களை உணர்ந்து தர்ம வாழ்க்கை நடத்தின மகான்களின் பெருமையினால்தான் இந்த உலகம் ஞான ஒளி பெற்றிருக்கிறது.


                       உரன் என்னும்தோட்டியான்ஓர்ஐந்தும் காப்பான் வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்த

 

பொருள்::

வைராக்கியம் என்ற அங்குசத்தால் ஐந்து இந்திரியங்களான மதயானைகளை அடக்கியாண்டு உலகத்திற்கு நண்மை உண்டாக்கக்கூடிய தெய்வீக சக்திக்கு இருப்பிடமானவர்கள் அம்மகான்கள்.


                         ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான் இந்துரனே சாலும் கரி.

 

பொருள்::

(ஐந்து இந்திரியங்களை அடக்குவது ஆன்ம சக்தி தருவதற்கும் அல்லாமல் உலகத்திலேயே மேலான இன்பங்களை அடையவும் ஆற்றல் தரும்) ஐந்து இந்திரியங்களையும் அடக்குவதால் அடையக்கூடிய ஆற்றலுக்கு, இந்திரியங்களை அடக்கி யாகங்களைச் செய்து இந்திர பதவி அடைகின்ற தேவேந்திரன் கதையே சாட்சியாகும்.


                        செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கு அரியசெய்கலாதார்.

 

பொருள்::

மற்றவர்கள் செய்ய முடியாத அபூர்வ காரியங்களைச் சாதிக்கக்கூடியவர்களே நீத்தார் எனப்பட்ட பெரியவர்கள். அப்படிச் செய்ய முடியாத துறவிகள் நீத்தரல்லர். இங்கே சொல்லவந்தது.அந்தச்சிறிய துறவிகளைப் பற்றியன்று.


              
  சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிவான்கட்டே உலகு.

 

பொருள்::

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து உணர்ச்சிகளையும் அவற்றைப்பற்றிய உண்மைகளையும் அறுந்து அவற்றை வசப்படுத்திய பெரியோரைத்தான் உலகத்தில் அறிவுடையோர் போற்றி வந்திருக்கிறார்கள்.


                         நிறைமொழி மாந்தர் பெருமை நலத்து மறை மொழி காட்டி விடும்.

 

பொருள்::

அந்த மகான்கள், சொன்னது பலிக்கும் தவ வலியுள்ளவர்கள் அவர்கள் பெருமையை வேதங்கள் காட்டுகின்றன.


                         குணம் என்னும் குன்று ஏறி நின்றான் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.

 

பொருள்::

(அவர்கள் சொன்னது பலிக்குமென்றால் அவர்கள் பிறரைச் சபிப்பது தீமை செய்யமாட்டார்கள் ,தமது செல்வாக்கை நண்மைக்கே செலவிடுவார்கள்) நீத்தார் எனப்படுவோர் நல்ல குணம் என்ற மலையின் உச்சியிலே இருப்பார்.அதனால் வர்களுக்கு கோபமே வராது வந்தாலும் கணநேரங்கூட தாங்காது.


                          அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ் உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்.

 

பொருள்::

அவர்கள் சாந்ததின் நிலையமானவர்கள். தர்மம் தவறமாட்டார்கள். எல்லா சீவராசிகளிடத்தும் அன்பையே மேற்க்கொண்டு நடப்பவர்கள்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com