|
தகுதி என ஒன்று நன்றே பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
|
பொருள்::
|
(ஒரு வழக்கைத் தீர்த்துவிட நடுவுநிலைமையாகப்
பாரபட்சமிக்லாதிருக்க வேண்டிய ஒருவன்) வழக்கினால் கருத்து வேற்றுமைப் பட்டவர்களுடைய
நிலையில் தன்னை ந்றுத்திக்கொண்டு ஆரய்ந்தால் நடுவு நிலமை சரியாக இருக்கும்.
|
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு
உடைத்து.
|
பொருள்::
|
(வழக்கைத் தீர்ப்பவன்) ஓரவஞ்சகனற்றவனாக நடந்து கொண்டால்
அந்தப் பெருமை அழியாமலிருந்து அவனுடைய பரம்பரைக்கு பாதுகாப்பாகும். |
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்.
|
பொருள்::
|
(ஓர வஞ்சகத் தீர்ப்பு செய்வதால் பெருத்த செல்வம் வருவதாக
இருந்தாலும்) எவ்வளவு நல்லதானாலும் நடுவு நிலமையான நேர்மையை விட்டு விட்டு
அடயக்கூடிய செல்வத்தை அப்போதே விலக்கிவிட வேண்டும்.
|
தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப் படும்.
|
பொருள்:: |
(ஓர வஞ்சனையால் வருகின்ற செல்வம் சந்ததியை கெடுத்து விடும்)
ஒருவன் நடுவு நிலமை தவறாமல் இருந்தவனா அல்லவனாஎன்பதை அவனுடைய சந்ததிகளில்
கண்டுகொள்ளலாம். |
கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு
அணி.
|
பொருள்:: |
(அதனால்) ஏழையாக இருப்பதும் பனக்காறனாக இருப்பதும் உலகத்தில்
எல்லாருக்கும் உள்ளதுதான். எவ்வளவு செல்வம் வருவதானாலும் மனம் நேர்மையை விட்டு
(செல்வத்தைக் கருதிக்) கோணாமல் இருப்பதுதான் உயர்ந்தகுணமுடையவர்களுக்குச்
சிறப்புத்தருவது.
|
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் நடுவ ஒரீ இ அல்ல செயின்.
|
பொருள்:: |
(நடுவு நிலமை தவறக்கூடாது என்பதை ஒருவனுடைய மனச்சாட்சியே
சொல்லும்) ஒருவன் நடுவு நிலமை தவறிப் பாரபட்சமாக ஒரு தீர்ப்பு சொல்ல நினைக்கும்
போது அவனுடைய மனச்சாட்சி "நான் கெட்டுப்போவேன்" என்று எச்சரிக்கும். அதை அறிய
வேண்டும்.
|
| |
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக் கண் தங்கியான் தாழ்வு.
|
|
பொருள்::
|
(நடுவு நிலைமையுள்ளவன் ஏழையாக இருந்தாலும்) நடுவு நிலைமை
தவறாமல் நடந்து கொள்ளும் ஒருவன் ஏழையாக இருப்பினும் அதை ஒரு குறையாக எண்ணாமல் உலகம்
அவனைச் சிறப்புள்ளவனாகவே மதிக்கும். |
சமன்செய்துசீர்தூக்கும்கோல்போல்அமைந்துஒருபால்கோடாமை சான்றோர்க்கு அணி.
|
பொருள்:: |
(ஒரு வழக்கை தீர்க்கும் போது) துலாக்கோல் போல நேர்மை கோணாமல்
வழக்கைச் சீர் தூக்கிப் பர்த்து ஒரு பக்கத்திலும் சாய்ந்து விடாமல் இருப்பதுதான்
மேலான குண்முள்ளவ்ர்களின் சிறப்பு. |
சொற் கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா உட் கோட்டம் இன்மை
பெறின்.
|
பொருள்:: |
(அதனால்) மனம் ஒரு பக்கத்திலும் சாய்ந்து விடாமல் இருந்தால்
வழக்கில் தீர்ப்புச்சொல்லுவதும் நடுவு நிலைமைதவறாததாகவே இருக்கும். |
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம்போல் செயின்.
|
பொருள்:: |
பிறருடைய பண்டங்களையும் தம்முடைய பண்டங்களைப் போல்
நிறுப்பதுதான் வியாபாரிகளின் சிறப்பு. அதுபோல் பிறருடைய வழக்கையும் தம்முடைய
வழக்காகச் செய்வதுதான் நடுவு நிலைமையின் சிறப்பு.
|
|