கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

Home

History

Photos

Tsunami Photos

Tamil MP3

Tamil Fonts

Cinema

Cinema

 


 

மெய்யுணர்தல்.


 Users online ::

         

                        பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு.

பொருள்::

பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.


                          இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.

பொருள்::

 மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்.


                         ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்  வான நணிய துடைத்து.

 

பொருள்::

 ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.


                       ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு.

 

பொருள்::

உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள்இ தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.


                         எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

 

பொருள்::

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல்இ அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.


                      கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.

 

பொருள்::

 துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்றுஇ உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர்இ மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.

              
  ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

 

பொருள்::

உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.


                         பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு.

 

பொருள்::

அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.


                          சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய்.

 

பொருள்::

துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால்இ அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.


                          காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடு நோய்.

 

பொருள்::

விருப்புஇ வெறுப்புஇ அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com