|
பெறுமவற்றுள்
யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கட்பேறு
அல்ல பிற.
|
பொருள்::
|
நாம் அடைய
வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுக்குள் நல்லறிவுடைய குழந்தைகளைப் பெறுவதைக்
காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்கு தெரிய வில்லை. |
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
|
பொருள்::
|
(அறிவுடையவர்களகிய இருப்பதன் பயனாக)
பழிபாவங்களுக்கு ஆளாகிவிடாத நல்ல குணமுடைய
மக்களைப் பெற்ற தாய்தந்தையர் அவர்களுடைய
அடுத்த ஏழு பிறப்புகளிலும் கூடத் துன்பம்
இல்லாதவர்களாக இருப்பார்கள். |
தம் பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள் தம்
தம் வினையான் வரும்..
|
பொருள்::
|
தம்முடைய மக்கள்
தமக்குச் செல்வம். என்றாலும், செல்வத்தைப்போல மக்களும் பல நண்மைகளுக்கு உதவக்கூடிய
நற்குண் நற்செயல்கள் அமைந்தவர்களாகப் பிறப்பது மக்களைப் பெற்றவர்களுடைய
வினைப்பயனைப் பொருத்துத்தான். |
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிது கை அளாவிய கூழ்.
|
பொருள்:: |
(மக்களுடைய குணங்கள் அனுபவிப்பது
பின்னாலிருக்க அம்மக்கள் குழைந்தைகளாக
இருக்கும் போது) நம் குழந்தைகள்
அவர்களுடைய சின்னஞ்சிறு கைகளை
விட்டிக்குழப்பிய சோறு அமிர்தத்தைவிட
இனிமைதரும். |
மக்கள் மெய்தீண்டல்உடற்கு இன்பம்மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
|
பொருள்:: |
(மேலும்)
தாம் பெற்ற குழந்தகளின் உடல் தம் உடலைத்
தீண்டுவது உடலுக்கு இன்பம் அளிக்கும்.
தாம் பெற்ற குழந்தைகளின் பேச்சை
கேட்பது காதுக்கு இன்பமளிக்கும். |
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
|
பொருள்:: |
(பேச்சைவிட
மழலைச்சொற்கள் அதிக இன்பமளிப்பன) தாம் பெற்ற குழந்தைகளின் மழலைச்சொற்களை
கேட்கக்கொடுத்து வத்தவர்கள் தாம் புல்லாங்குழல் ஓசையும் வீணையின் ஓசையும் இனிமயானது
என்று சொல்லுவார்கள். |
| |
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முஎதி இருப்பச் செயல். |
|
பொருள்::
|
(குழந்தைகளை
வளர்ப்பதில்) தகப்பன் மகனுக்கு செய்ய
வேண்டிய நல்ல காரியம் என்ன வென்றால், தன்
மகன் கற்றவர் சபையில் முதல் வரிசையில்
சிறப்புடையவனாக விளங்கும் படி(கல்வி
கேள்வி அறிவுடையவனாகச்) செய்து வைக்க
வேண்டும் என்பதுதான். |
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மண் உயிர்க்கு எல்லம் இனிது.
|
பொருள்:: |
தம்மைவிடத்
தம்முடைய மக்கள் அறிவுடையவர்களாக
விளங்குவது உலகத்திலுள்ள எல்லா
மனிதருக்கும் இயற்கையாக இன்பம் தருவது. |
ஈன்ற
பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றோர் என்க் கேட்ட தாய்.
|
பொருள்:: |
(தன்
மகன் அறிவுடையவாய் விளங்குகிறான்
என்பதைவிட) தன் மகன் மிக உயர்ந்த
குண்முடைய நல்லவனாக இருக்கிறான் ஊரார்
புகழ்வதைக் கேட்கிறபோது ஒரு தாய். தன்
மகனை அவள் பெற்றெடுத்தபோது அடைந்த
மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைவாள். |
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன் தந்தைஎன
நோற்றான்கொல் எனும் சொல்.
|
பொருள்:: |
தன்னைப் பெற்று
வளர்த்துக் கல்வியறிவூட்டிச் சிறப்படைய
செய்த பெற்றோருக்கு) மகன் தந்தைக்கு
செய்யவேண்டிய நன்றி என்ன வென்றால்,
எப்படிப்பட்ட அறிவும் நற்க்குணமும் உள்ள
மகனைப் பெற்ற இவன் தந்தை என்ன
அதவம் செய்தானோ..? என்று உலக்த்தார்
சொல்லும் புகளுரைதான். |
|