|
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
|
பொருள்::
|
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள
நிலம்இ நீர்இ தீஇ காற்றுஇ வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக்
கொள்ளும்.
|
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்.
|
பொருள்::
|
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்இ துறவுக்கோலம்
பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. |
வலியில்நிலைமையான்வல்லுருவம்பெற்றம்
புலியின்தோல்போர்த்துமேய்ந் தற்று.
|
பொருள்::
|
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவதுஇ பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக்
கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
|
தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
|
பொருள்:: |
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும்இ
தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.
|
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.
|
பொருள்:: |
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம்இ
பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறிஇ உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும். |
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்.
|
பொருள்:: |
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற
வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.
|
| |
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து. |
|
பொருள்::
|
வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும்இ குன்றிமணியின்
முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. |
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
|
பொருள்:: |
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போலஇ மாண்புடையோர் எனும்
பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். |
கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்.
|
பொருள்:: |
நேராகத் தோன்றும் அம்புஇ கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ்இ இசைஇ
இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே
உணர்ந்து கொள்ள வேண்டும். |
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.
|
பொருள்:: |
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவிஇ தனது தலையை
மொட்டையடித்துக் கொண்டோஇ சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக்
கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும். |
|