|
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
|
பொருள்::
|
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள்
அனைத்தையும் விளைவிக்கும்.
|
பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
|
பொருள்::
|
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல்இ கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டுஇ எல்லா உயிர்களும்
வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை. |
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
|
பொருள்::
|
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம்
பெறுகின்றன.
|
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி.
|
பொருள்:: |
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
|
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
|
பொருள்:: |
உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக்
கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார். |
கொல்லாமைமேற்கொண்டொழுகுவான்வாழ்நாள்மேல்செல்லாதுயிருண்ணுங் கூற்று.
|
பொருள்:: |
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்துஇ சாவுகூட அவர்
உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.
|
| |
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. |
|
பொருள்::
|
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில்
ஈ.டுபடக்கூடாது. |
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
|
பொருள்:: |
பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும்இ நல்ல பண்புடைய
மக்கள்இ அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள். |
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
|
பொருள்:: |
பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம்இ இழிதகைப்
பிறவிகளாகவே கருதும். |
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
|
பொருள்:: |
வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர்இ ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக
இருப்பர் என்று முன்னோர் கூறுவர்
|
|