|
எள்ளாமை வேண்டுவானென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமைகாக்கதன் நெஞ்சு.
|
பொருள்::
|
எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்)
கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
|
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.
|
பொருள்::
|
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன்
நினைப்பதேகூடக் குற்றமாகும். |
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.
|
பொருள்::
|
கொள்ளயடித்துப் பொருள் குவிப்பதுஇ முதலில் பெரிதாகத் தோன்றினாலும்இ அந்தச் செயல்
ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.
|
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.
|
பொருள்:: |
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம்இ அதனால் உருவாகும் விளைவுகளால்
தீராத துன்பத்தை உண்டாக்கும்.
|
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.
|
பொருள்:: |
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில்இ அருள்
கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது. |
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
|
பொருள்:: |
ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள்இ களவு செய்து
பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.
|
| |
களவென்னுங்
காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில். |
|
பொருள்::
|
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம்இ களவாடுதல் எனும் சூதுமதி
கிடையாது. |
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
|
பொருள்:: |
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ
குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும். |
அளவல்ல
செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
|
பொருள்:: |
அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள்இ வரம்பு கடந்த செயல்களால்
வாழ்விழந்து வீழ்வார்கள். |
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை
கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
|
பொருள்:: |
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும்
பார்க்காதவர்க்கோஇ புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது. |
|