கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

இனியவை கூறல்.


 Users online ::

         

                        இன் சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்.

பொருள்::

இல்வாழ்க்கையில் பயன்களைச் செய்யாமையாக அறிந்தவர்களுடைய வயிலிருந்து வெளிவரும் சொற்கள் இனிமையாகவும் அன்புகலந்தவையாகவும் வஞ்சக நோக்கம் இல்லாதவனாகவும் இருக்கும். இதுதானினியவை கூறல்.


                           அகன் அமர்ந்து ஈதலின் நற்றே முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பொறின்.

பொருள்::

 (இந்தக்குணம் தானம் கொடுப்பதிலும் சிறந்தது) முக மலர்ச்சியோடு இனிய வார்த்தைகளை சொல்வது மனபூர்வமாக தானம் கொடுப்பதிலும் நல்லது.


                        முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானம் இன் சொலினதே அறம்.

 

பொருள்::

 (தர்மம் என்பதே இனியவை கூறுவதில் அடங்கி விடும்) முக மலர்ச்சியோடு இனிமை தரப்பார்ப்பதே. மனப்பூர்வமாக இனிய வார்த்தைகளைச் சொல்லுவதே அறங்களின் அடிப்படை.


                       துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார் மாட்டும் இன் புறூ உம் இன் சொலவர்க்கு.

 

பொருள்::

(அப்படிப்பட்டவர்களுக்கு வறுமையே வராது) யாரிடத்திலும் இன்பம் உண்டாகக்கூடிய இனிய சொற்களையே பேசுகின்றவர்களுக்குத் துன்பந் தருகிற பசிப்பிணியே வராது.


                        பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்றுப் பிற.

 

பொருள்::

 (பசி வராமல் இருப்பதாக மட்டுமல்ல) வணக்கமுடையவனாகவும் இனிய சொற்களே பேசுகிறவனாகவும் இருப்பதுதான் மனிதனுக்கு அழகு. அது மட்டுமல்ல. அதனால் வேறு பல நண்மைகளும் உண்டு.


                     

அல்லவை தேய அறம் பெருகும் நில்லவை நாடி இனிய சொலின்.

 

பொருள்::

 (அந்த வேறு பல நண்மைகள் என்ன வென்றால்) நல்ல எண்ணத்தோடு நல்ல சொற்களையே பேசினால் பாவங்கள் குறைந்து புண்ணியம் அதிகமாகும்.

   

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.

 

பொருள்::

(நல்ல எண்ணம் என்பது பிறருக்கு நண்மை வர எண்ணுவது) பிறருக்கு நண்மை உண்டாகும் படிசொல்லுவதன் பண்பு கெடாதபடி இனிய வார்த்தைகள் பேசுகின்றவனுக்கு அருள் குணத்தை உண்டாக்கிப் பல நண்மைகளைச்செய்யும்.


                         சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.

 

பொருள்::

(அதனால் இன்மைக்கு மட்டுமல்ல மறுமைக்கும் உதவும்) மனதில் கெட்ட எண்ணம் இல்லாமல் இனிய சொற்களையே பேசினால் அது இன்மை மறுமை இரண்டிற்கும் நண்மை உண்டாக்கும்.


                         இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலொ வன் சொல் வழங்குவது?

 

பொருள்::

 (மறுமையைப்பற்றி எண்ணாவிட்டாலும் இம்மையிலேயே கண்ணாரப் பார்க்கிறோம்) இனிய வார்த்தைகளால் இனிய பலன்கள் உண்டாவதைத் தினம் தினம் கண்ணுக்கு முன்னால் பார்த்துக்கொணடிருக்கின்ற மனிதன். எதற்காகத் துன்பத்தை உண்டாக்குகிற கடுஞ்சொற்களைப் பேசுகிறானோ தெரியவில்லை.

                          இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று.

 

பொருள்::

ஆகையினால் இனிய வார்த்தைகள் வேண்டிய மட்டும் இருக்கும் போது துன்பமான வார்த்தைகளை பேசுவது ஒரு மரத்தில் பழங்கள் வேண்டிய மட்டும் இருக்க பழத்தை விட்டுப் பச்சைகாய்களைப் பறித்துக்கொள்வது போலத்தான்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com