கற்க கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக!

 


 

இல்வாழ்க்கை.


 Users online ::

         

                        இல்வாழ்வான் என்பான் இய்ல்பு உடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்றதுணை.

பொருள்::

மனைவி மக்களோடுவாழ்ந்து குடும்பம் நடாத்துகிறவன் சமுதாயத்தில் உள்ள உறவினர், நண்பர்கள் எளியவர்களாகிய மூன்று இனத்தாருக்கும் நல்ல முறையில் உதவியாக இருப்பான்.


                           துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.

பொருள்::

(மேலும்)துறவிகளுக்கும், பசித்திருக்கும் எவருக்கும், நிலை கெட்டுப்போனவர்களுக்கும் குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன்தான் உதவியானவன்.

                        தென்புலதார்தெய்வம்விருந்து ஒக்கல் தான்என்றுஆங்குஐம்புலத்துஆறுஓம்பல் தலை.

 

பொருள்::

(குடும்பியானவன் தன் கடைமைகளை எந்த வரிசைக் கிரமத்தில் கவனிக்க வேண்டுமென்றால்) மூதாதைகளை பூசித்தல், தெய்வ வழிபாடு, விருந்தாக வந்திருப்பவர்கள், வீட்டிலுள்ளவர்கள் என்ற வரிசை முறையில் செய்வன செய்துவிட்டுக் கடைசியாக தனக்கு வேண்டியதைக் கவனிப்பதுதான் சிறந்த முறை.


                       பழி அஞ்சிப் பாத்தூஉண் உடைத்தாயின் வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

 

பொருள்::

 (அந்த முறையில் தினம் தினம் கவனிப்பது முடியாவிட்டாலும்) பழி பாவங்களுக்கு பயந்து நடந்துகொண்டு உள்ளத்தில் பிறர்க்கும் பங்கு கொடுத்து உண்டு வாழ்க்கை நடாத்தினால் போதும். அது இல்வாழ்க்கை முறைக்குக் குறைந்ததன்று.


                         அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

 

பொருள்::

(சுருக்கமாக சொன்னால்) எதைச்செய்தாலும் அன்போடும் தர்ம நியாயம் தவறாமலும் செய்தால் அதுதான் இல்வாழ்க்கையின் தன்மை. அதனால் தமக்கும் உலகத்துக்கும் நல்ல பயனுண்டாகும்.


                        அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றின் போஒய்ப்பெறுவது எவன்?

 

பொருள்::

தர்ம நெறி தவறாமல் மனைவி மக்களோடு இல்வாழ்க்கைநடத்தினால் ஒருவன் துறவறத்துக்கு போய் அடையக்கூடிய நண்மை என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை.

              
  இயல்பினான் இல்வாழ்க்கைவாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.

 

பொருள்::

ஏனென்றால், சரியான முறையில் இல்வாழ்க்கை நடத்துகிற குடும்பி, மேலான வாழ்வு பெற தவநெறியில் முயற்சி செய்கிறவர்கள் எல்லாரிலும் சிறந்தவன்.


                         ஆற்றின் ஒழுக்கி, அறம் இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.

 

பொருள்::

(எப்படியென்றால்) முறைப்படி நடந்துகொண்டு தர்மநியாயம் தவறாமல் குடும்பம் நடத்துகிறவன் துறவுபூண்டு தவம் செய்கிறவர்களைவிடப் பொறுப்பும் சகிப்புத்தன்மையும் உடையவன்.


                         அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அ/தும் பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று.

 

பொருள்::

(ஆகையினால்) மனிதனுக்கும் தர்மம் என்று சொல்லப்படுவதே குடும்ப வாழ்க்கைதான். ஆனாலும் மற்ற நெறியை கடைப்பிடிக்கும் துறவறத்தாரை அவதிகமலிருப்பது நல்லது.


                          வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.

 

பொருள்::

(கடவுளை அடையவேண்டுமென்றுதானே துறவறத்துக்குப்போகிறார்கள்? துறவறத்துக்கு போகாமலேயே) உலகத்தில் வாழ வேண்டிய முறைப்படி குடும்ப வாழ்க்கை நடத்துகிறவன் வேறு முயற்சி இல்லாமலும் வானத்தில் இருக்கிற தெய்வத்தோடு சேர்க்கப்படுவான்.


  Back<<                                                                                                                                            www.nakarmanal.com